தினமும் நடைபெறும் இப்தார் சிந்தனை சிறப்பு உரைகளில் இருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து மாத இறுதியில் கொடுக்கப்படும் வாட்ஸ்அப் இலக்கம் அல்லது மெயிலுக்கு உங்கள் விடைகளை அனுப்பி வைத்து வெல்லுங்கள் பயன் பெறுங்கள்.
தொடர்புக்கு Whatsapp No.
+966 53 182 6557
ரமழான் 1 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- அறபு மொழியில் ‘ஆகிபா’ என்பதன் பொருள் யாது?
- அல்குர்ஆனில் ‘ஆகிபா’ என்று எப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது?
- உரை முழுக்கக் கூறப்பட்ட நபிமார்களின் பெயர்கள் யாது?
ரமழான் 2 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்வி
- உரையில் கூறப்பட்ட ஓர் இமாமின் பெயர் யாது?
ரமழான் 3 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- இருவர் மாத்திரம் ஜமாஅத்தாக தொழும்போது மஃமூம் எவ்வாறு நிற்க வேண்டும்? அதற்குரிய ஆதாரம் யாது?
- நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி அண்ணை ஆயிஷா (றழி) அவர்கள் எவ்வாறு வர்ணித்தார்கள்? *
ரமழான் 4 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- உரையின் தொனிப்பொருளாக கூறப்பட்ட வசனம் அல்குர்ஆனில் எத்தனையாவது அத்தியாயமாக, வசனமாக இடம்பெற்றுள்ளது?
- இறையச்சமும், பொறுமையும் சேர்த்து கூறப்பட்ட அல்குர்ஆன் வசனங்களில் இரண்டைக் குறிப்பிடுக. (அத்தியாயப் பெயர், வசன எண் மட்டும் போதுமானது)
ரமழான் 5 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- பொறுமையின் வகைகளைக் குறிப்பிடுக?
- நல்லரங்கள் செய்பவர்களுக்கு வழங்கப்படும் கூலி யாது?
ரமழான் 6 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- அல்-இஸ்திகாமா என்பதன் சரியான பொருள் யாது?
- உரை முழுக்க இஸ்திகாமா தொடர்பாகக் கூறப்பட்ட அல்குர்ஆன் வசனஙகள் எத்தனை? சிறப்பு தொடர்பாகக் கூறப்பட்ட வசனம் யாது? (அத்தியாப் பெயர், வசன எண் போதுமானது)
ரமழான் 7 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- ‘ஒருவர் இன்னுமொருவரின் சுமையை சுமக்கமாட்டார்’ எனும் கருத்துள்ள வசனங்கள் அல்குர்ஆனிpல் எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?
- அல்குர்ஆனில் கூறப்பட்டிருக்கும் ‘இரு நல்லடியார்கள்) என்பவர்கள் யார்?
ரமழான் 8க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- அல்லாஹ், அல்குர்ஆனில் கேள்விகேட்கின்றனர் எனக்கூறி விடையளித்து இடம்பெற்றிருக்கும் வசனங்கள் எத்தனை?
- நாம் செய்யும் பிரார்த்தனைகள் ஏதோ ஒரு விதத்தில் அங்கீகரிக்கப்படுகிறது. அவ்விதங்கள் யாது? (சுருக்கமாக)
ரமழான் 9 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- பாவத்திற்கு துணை போகக்கூடாது என்பதற்கு ஓர் ஆதாரம் தருக?
ரமழான் 10 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- உரையின் தொனிப்பொருளான வசனத்திற்கு நிகரான பொருளைக் கொண்டு கூறப்பட்ட வசனம் யாது?
- இவ்வுலக இன்பங்களை மறக்கடிக்கக்கூடிய அம்சங்களைக் கூறுக.
ரமழான் 11 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- இன்றைய உரையின் தொனிப்பொருளான அல்குர் ஆன் வசனத்தில் உள்ளடங்கியிருக்கும் நான்கு உபதேசங்களை சுருக்கமாகத் தருக.
- பொருளாதாரம் தொடர்பாக மறுமையில் கேட்கப்படும் இரண்டு கேள்விகளைக் குறிப்பிடுக.
ரமழான் 12 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- இமாம் இப்னுல் கையும் (ரஹ்) அவர்கள் கூறும் மனோ இச்சையைப் பின்பற்றியவர்கள் யார்?
ரமழான் 13 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- உரையில் ‘துறுப்பிடித்தல்’ என்பதற்கு பாவிக்கப்பட்ட வார்த்தை யாது?
ரமழான் 14 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- அல்லாஹ்விடத்தில் ஒரு நாள் என்பது இவ்வுலக வருட எண்ணிக்கையில் எத்தனைக்கு சமம்? ஆதாரம் தருக.
- முஃமின்களுக்கு சுவனம் தருவதாக அவர்களிடமிருந்து அல்லாஹ் வாங்கிக்கொண்டவை எவை?
ரமழான் 15 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- தொழும்போது சோர்வு ஏற்பட்டால் பிடித்துக்கொள்வதற்காக இரண்டு தூண்களுக்கிடையில் கயிற்றை தொங்கவிட்டிருந்த ஸஹாபிப் பெண்மனி யார்?
- மூலவியாதியால் பீடிக்கப்பட்டிருந்த நபித்தோழரை அமர்ந்து தொழும்படி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தோழரின் யெர் யாது?
ரமழான் 16 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- சோதனைகளின் போது ஒரு விசுவாசியிடம் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் எவை?
- குர்ஆன் கூறும் ஓரு முஃமினின் பண்புகள் இரண்டைக் கூறுக.
ரமழான் 17 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- உள்ளம் தூய்மையாகுவதற்கு அவசியமானவைகளைக் குறிப்பிடுக.
ரமழான் 18 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- துஆக்கள் எத்தனை வகைப்படும்? அவைகள் எவை?
- அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு அருளிய அருள்களில், அஷ்ஷரஹ் அத்தியாயத்தில் எத்தனை அருள்கள் பற்றிக் கூறப்பட்டுள்ளது?
ரமழான் 19 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- லைலதுல் கத்ர் வருடந்தோறும் ஒரே நாளில் வருமா என்பதற்கு அறிஞர்களின் கருத்துயாது?
- உரையில், சுவனத்தின் புதையல் எனக் கூறப்பட்ட திக்ர் யாது?
ரமழான் 20 க்கான இப்தார் சிந்தனையிலிருந்து கேள்விகள்
- (கைருஸ் ஸாத்) தயார் செய்யப்படுபவைகளில் சிறந்தது எது?
- இறையச்சமுடையவர் (அத்கா) தூரமாகிவிடுவார் என்பதில் ‘அத்கா’ என்பவர் யார்?