புதிய பதிவுகள் / Recent Posts

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -1

மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி ஹஜ்ஜும் உம்ராவும் நற்கூலிகளை பெற்றுத் தரும் மிக சிறந்த வணக்க வழிபாடுகளில் ஒன்றாகும் . இவ்விரு வணக்க வழிபாடுகளின் மூலம் ஒரு அடியானின் பாவங்ககளையும் குற்றங்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான். “ஒரு உம்ராச் செய்துவிட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சுவர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பவர்: …

Read More »

பித்அத் தவிர்ப்போம்!

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலஃபி) “அஹ்லுஸ் ஸுன்னா”, “பிர்கதுன்னாஜியா” (வெற்றி பெற்ற பிரிவினர்), அத்தாயிபதுல் மன்ஸூரா (உதவி செய்யப்படும் குழுவினர்) என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் சுவனம் செல்லும் பிரிவினரின் பண்புகளில் பித்அத்தை விட்டும் விலகியிருப்பதும் ஒன்றாகும். பித்அத்தைத் தவிர்ப்பதும், அதை எதிர்ப்பதும் அஹ்லுஸ் ஸுன்னாவின் பண்பாகும். பித்அத்: “பித்அத்” என்பது ஓர் அறபுப் பதமாகும். “பதஅ” என்ற வினைச் சொல்லிலிருந்து இது உருவானதாகும். புதியது, முன்னுதாரணமின்றித் தோற்றுவிக்கப்பட்டது என்பன இதன் …

Read More »

அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய செயல்கள்…..

அபூ ஹுனைப் ஹிஷாம் (மதனி) بسم الله الرحمن الرحيم அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய செயல்கள் பல உள்ளன. அவற்றை நாம் கண்டறிந்து செயற்படுவோமென்றால் அவனின் கருணை நிச்சயமாக எங்களையும் வந்தடையும். அந்தவிதத்தில் அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய சில செயல்களை இங்கு நாம் இனங்காட்டுகின்றோம். 01. படைப்பினங்கள் மீது கருணை காட்டல். அல்லாஹ்வின் படைப்புகள் மீது கருணை காட்டுவது அவனின் கருணையை எமக்குத் தேடித்தரும். நபியவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளவர்களுக்கு …

Read More »

அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளும்

_அஸ்கி இப்னு ஷம்சிலாபிதீன் முன்னுரை அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அவனுக்கே உயர்ந்த பண்புகள் உள்ளன. அவனுக்கு ஒப்பானவன் யாருமில்லை. அவனுடைய பண்புகளை எமக்கு எத்திவைத்த எம் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும் தன்னுடைய இறைவன், நபி, மார்க்கம் ஆகியவைகளைப்பற்றித் தெரிந்து கொள்வது கட்டாயக் கடமையாகும். அல்லாஹ்வைப்பற்றித் தெரிந்து கொள்ளும்போது கட்டாயம் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் தெரிந்து …

Read More »

நபி(ஸல்) அவர்கள் சிரித்த சந்தர்ப்பங்கள்

– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலஃபி) “சிரிப்பு” என்பது அல்லாஹ் மனிதனுக்கு மட்டுமே வழங்கிய ஒரு அருட்கொடையாகும். சிரிக்கத் தெரியாத மனிதன் வாழ்வை இரசிக்கத் தெரியாதவன். பிறரின் மனதைக் குளிரச் செய்யத் தெரியாதவன். அன்பையும், அரவணைப்பையும், கூட்டு வாழ்வையும், நட்பையும் புரிந்துகொள்ளத் தெரியாதவன். மனித வாழ்வில் “சிரிப்பு” என்பது மிக மிக முக்கியம். குறைந்த பட்சம் அடுத்தவரைக் காணும் போது ஒரு புன்முறுவலையாவது வெளிப்படுத்தாத மனிதன் மனிதனேயல்ல. உன் சகோதரனைச் சிரித்த …

Read More »