பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். எம்மையெல்லாம் படைத்த இறைவன் எம்முடைய உடல் உறுப்புகளை தவறான செயல்களை செய்வதை விட்டும் பாதுகாக்குமாறு ஏவியிருக்கிறான். அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் தவறான காரியங்களை செய்வதை விட்டும் உடல் உறுப்புகளை பாதுகாப்பதானது அல்லாஹ் தந்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதாகப் பார்க்கப்படுகின்றது. இப்படிப்பட்ட இந்த அருட்கொடைகளை பாவ காரியங்களின் பக்கம் திருப்புபவர்களை அல்லாஹ் கடுமையான வேதனையைக் கொண்டு எச்சரிக்கை செய்திருக்கிறான். அல்லாஹ் தந்த உறுப்புகளில் முக்கியானவைகள்தான் செவிப்புலனும் பார்வைப்புலனுமாகும். …
Read More »அல்லாஹ்வினுடைய றஹ்மத்தை அறிந்து கொள்வோம்…!
M.F.பர்ஹான் அஹமட் ஸலபி உலகில் வாழ்கின்ற மனிதனது நோக்கங்களை இரண்டு வகையாக பிரித்து அறியலாம். முதலாவது வகை உலக வாழ்வுடன் தொடர்புடையது. தான் இந்த உலகத்தில் வாழ்கின்ற போது தனது எதிர்காலத்தை எவ்வாறு திட்டமிட்டு முகாமைத்துவம் செய்து வாழலாம் என்று இவ்வுலக வாழ்வின் நோக்கத்தை அடைவதற்காக முழு முயற்சியுடன் செயற்படுவதாகும். ஆனால் உண்மையான முஃமினின் வாழ்க்கையை பொருத்தமட்டில் அவன் உலக வாழ்வையும் பார்க்க மறுமையில் தான் ஈடேற்றமான வாழ்க்கையை பெற்றுக் …
Read More »நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம்…
بسم الله الرحمن الرحيم. -ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி அல்லாஹ்வை மாத்திரம் இறைவனாக ஏற்ற முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் தமக்கு மத்தியில் கொள்கையடிப்படையில் சகோதரர்களாக இருந்து கொண்டிருக்கிறோம். தன்னுடனேயே பிறந்து ஒன்றாக வளர்ந்த உடன் பிறந்த சகோதரன் ஏதாவது தவறு செய்கின்ற போது எப்படி அவனை அத்தவறை விட்டும் தடுக்கின்றோமோ அதே போன்று கொள்கை ரீதியாக சகோதரர்களாக இருக்கின்ற நாமும் தவறுகள் செய்கின்ற போது நமக்கு மத்தியில் திருத்தக் கூடியவர்களாக …
Read More »புத்தாண்டு கொண்டாட்டமும், முஸ்லிம்களும்..
-ஷெய்க் முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி புது வருடத்தை வரவேற்பதற்காக கிறிஸ்தவ உலகம் தயாராகின்றது, ஏனைய சமூகங்கள் தயாராகின்றன என்றால் அதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இஸ்லாமிய உலகும் தயாராகின்றது என்றால் அதை விட வேதனை வேறு என்ன இருக்க முடியும்?. தனது வாழ்நாளில் ஒரு வருடம் குறைந்து விட்டதற்காக அதை மகிழச்சியுடன் கொண்டாடுவது என்பது ஒரு விதத்திலும் அறிவுப்பூர்வமான விடயமாக இருக்க முடியாது. மாறாக தனது வாழ்நாளில் ஒரு வருடம் …
Read More »இஸ்லாமிய பார்வையில் புத்தாண்டு கொண்டாட்டம்…
-ஷெய்க் அப்பாஸ் அலி MISC அன்பான இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்….. இன்னும் சில தினங்களில் 2019 ம் ஆண்டு முடிந்து புதிய ஆண்டை நாம் எதிர்கொள்ள இருக்கின்றோம். புது வருடப்பிறப்பு எனக் கூறி இதைக் கொண்டாடி மகிழும் கலாச்சாரம் உலகம் முழுவதும் உள்ளது. பல இஸ்லாமிய நாடுகளில் கூட இக்கலாச்சாரம் வேரூண்றியுள்ளது. நம் தமிழகத்திலும் இதன் ஆதிக்கம் அதிகமாகவே உள்ளது. இஸ்லாமிய சமூகத்தில் பலர் இது பற்றிய …
Read More »அலங்காரமாக மாற்றப்பட்ட தவறான விடயங்கள்…
-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி இந்த மார்க்கம் மனித வாழ்க்கைகுறிய அத்தனை விடயங்களையும் தெளிவுபடுத்துவதாக இருந்து கொண்டிருக்கின்றது. இதில் சொல்லப்படுகின்ற ஒவ்வொரு விடயங்களும் மனிதனை புனிதனாக மாற்றக்கூடியதாக இருக்கிறது. ஆனால் கவலைக்குறிய விடயம் என்னவென்றால் மார்க்கம் சொல்லித் தந்த விடயங்கள் மனிதனை தூய்மையானவனாக மாற்றக்கூடியதாக இருந்தும் அதற்கு முரணாக நடப்பது தான் அலங்காரமான விடயங்களாக பார்க்கப்படுகின்றது. அந்தடிப்படையில் சில விடயங்களை சுட்டிக்காட்டலாமென நினைக்கிறேன். நகங்களை நீளமாக வளர விடுதல்: இஸ்லாம் …
Read More »ஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா…?
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ்… இஸ்லாம் வாழ்க்கைக்கு ஏற்ற ஓர் இனிய மார்க்கம். அதன் சட்ட திட்டங்களை எடுத்து நடப்பதற்கு எளிய மார்க்கம். இப்படி தான் வாழ வேண்டும் என்று நபியவர்கள் வாழ்ந்து காட்டி, என் வழி நடங்கள் என்று வழி காட்டிச் சென்றுள்ளார்கள்.அல்ஹம்து லில்லாஹ் ! ஆண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், பெண்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள், இரண்டு சாரார்களுக்கும் பொதுவான சட்ட திட்டங்கள் என்ற ஒழுங்கு …
Read More »மனித வாழ்வில் இறையச்சமும் அதனுடைய முக்கியத்துவமும்…
-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உலக வாழ்வில் வாழுகின்ற போது ஒவ்வொரு மனிதர்களுக்கும் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமானது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. அல்லாஹ்வைப் பற்றிய அச்சம் எப்போது இல்லாது போகின்றதோ அப்போதே பாவ காரியங்கள் தலைவிரித்தாடக்கூடிய நிலை ஏற்பட்டுவிடும், மனித உரிமைகள் சர்வசாதாரணமாக மீறப்பட்டுவிடும். எனவே இறையச்சம் என்பது மிக முக்கியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. இறையச்சம் என்றால் என்ன? இறையச்சம் என்றால் என்னவென்பது பற்றி ஒவ்வொரு சாராரும் ஒவ்வொரு …
Read More »நேர்வழியின் பெறுமதியை உணர்வோம்.
-ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி உலகத்தில் விலை மதிக்க முடியாத அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்று தான் எமக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற இந்த ஹிதாயத் என்று சொல்லப்படுகின்ற நேர்வழியாகும். இதற்காக வேண்டி நாம் வாழ்நாள் முழுவதும் அல்லாஹ்வுக்கு ஸூஜூதில் இருந்தால் கூட அதற்கு ஈடாகமாட்டாது. நாம் நாளந்தம் எத்தனையோ விதமான பொருட்களை கடவுள் என்று நினைத்து வணங்கக்கூடிய மக்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் அவைகளை வைத்து நமக்கு அல்லாஹ் வழங்கிய நேர்வழியின் …
Read More »பிள்ளைகளை ஸாலிஹான பிள்ளைகளாக வளர்த்தெடுப்போம்.
بسم الله الرحمن الرحيم -ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி நவீன காலத்தை பொருத்தமட்டில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளில் பிரதானமானதுதான் தன்னுடைய பிள்ளைகளை எவ்வாறு ஸாலிஹான பிள்ளைகளாக உருவாக்குவதென்பதாகும். ஏனெனில் நவீன கால கண்டுபிடிப்புகளுக்கும் சமூக வலைத்தளங்களுக்கும் இன்று முஸ்லிம் சமுதாயம் எவ்வித வயது வித்தியாசமுமின்றி அடிமையாகியுள்ளது. ஒவ்வொரு பெற்றோர்களதும் ஆசையும் கனவும் தனக்கு பிறக்கயிருக்கின்ற குழந்தையை இறுதி வரைக்கும் நல்ல பிள்ளையாக வாழ வைக்க வேண்டுமென்பதாகும். ஆனால் …
Read More »இஸ்லாமும் மாற்று மத கலாச்சாரங்களும்
بسم الله الرحمن الرحيم _ஷெய்க் பர்ஹான் அஹமட் ஸலஃபி எம்மை படைப்புகளிலெல்லாம் சிறந்த படைப்பாக ஆக்கிய அல்லாஹ்வுத்தஆலா அதை விட விலை மதிக்கமுடியாத பெரிய அருட்கொடையைத் தந்து எம்மை மென்மேலும் கண்ணியப்படுத்தியிருக்கிறான். அதுதான் இஸ்லாம் என்கின்ற இந்த பரிசுத்த மார்க்கமாகும். அதிலுள்ள சட்டங்கள் மனிதனை புனிதமான ஒருவனாக மாற்றுவதுடன் , ஒரு மனிதன் காலையில் விழித்ததிலிருந்து இரவில் தூங்க செல்லுகின்ற வரை எவ்வாறு அவனுடைய காரியங்களை அமைத்துக் கொள்ள …
Read More »பள்ளிவாசலில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள்
தொகுப்பு: அஸ்கீ அல்கமீ(பலகத்துறை, நீர்கொழும்பு) அல்லாஹுத்தஆலா எமக்குத் தேர்ந்தெடுத்துத்தந்த இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு முஸ்லிமுடைய ஒழுக்க விடயங்கள், பண்பாடுகள், நடத்தைகள் குறித்து அதிகூடிய கவனம் செலுத்தக்கூடிய ஒரு மார்க்கமாக இருக்கின்றது. ஒரு முஸ்லிம் ஓர் இடத்திற்குச் சென்றால் அந்த இடத்தில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? எவ்வாறான நடத்தைகளில் ஈடுபடக்கூடாது என்பதற்க இஸ்லாம் பல வழிகாட்டல்களைக் கூறியிருக்கின்றது. அதன் பிரகாரம் ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு இவ்வுலகிலேயே …
Read More »தாடி வழித்தல் தொடர்பாகப் உலமாக்களின் தீர்ப்புகள்
-அபூஹுனைப் ஹிஷாம் (ஸலபி, மதனீ) بسم الله الرحمن الرحيم தாடி வழித்தல் தொடர்பாகப் பழைய புதிய 11 உலமாக்களின் கருத்துக்களை இங்கு நாம் தொகுத்தளித்துள்ளோம். அவற்றை நன்கு வாசித்துப் பயன்பெறுமாறு இப்பதிவு மூலம் விண்ணப்பிக்கின்றோம். 1. அல்லாமா இப்னு ஹஸ்ம் அல்அந்தலுஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தாடியை வழிப்பது அலங்கோலமாகும். எனவே, அது கூடாது என்ற கருத்தில் இமாம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.” (மராதிபுல் இஜ்மா, அல்மஹல்லி) 2. இப்னு …
Read More »பீ.ஜேவும் அவரைச் சார்ந்தவர்களும்…
_ஷெய்க் ரிஸ்வான் மதனி பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வாமானால், அவரது அமைப்பு சுவனாகும்? கட்டுரையை முடியும் வரை நிதானமாக படிக்கவும் முன்னுரை: தமிழ் பேசும் முஸ்லிம் தஃவா களத்தில் பேசு பொருளாவும் , விவாத அரங்காகவும் மாறிவிட்ட சமாச்சாரமாக இருந்த பீ.ஜே.யின் ஹதீஸ் மறுப்புக் கொள்கை மற்றும் அவரை கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் தக்லீத் எற்ற வழிகேடு திசை மாறி, தற்போது வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. இன்று சகோதரர் …
Read More »உங்களை நீங்களே தூய்மைப் படுத்தாதீர்கள்…
மௌலவி யூனுஸ் தப்ரீஸ். இன்று உலகில் மாறி, மாறி பிறரை குத்திக் காட்டி, குறை சொல்லி திரிவதை அன்றாடம் கண்டு வருகிறோம். ஒரு அரசியல்வாதி நான் மட்டும்சரி மற்றவர்கள் தவறில் இருக்கிறார்கள் என்கிறார். இன்றுள்ள சில அமைப்புகளில் உள்ளவர்கள். நாங்கள் சுத்தம் மற்றவர்கள் எல்லாம் அசுத்தம் என்று தங்களை தாங்களே சுத்தப்படுத்திக் கொள்கிறார்கள் இப்படியே பட்டியல் நீண்டு கொண்டே செல்வதை காணலாம். மனிதனைப் பொருத்தவரை தன்னை சுத்தமானவனாகவும், பிறரை குறைக்காணக் …
Read More »இரவில் து ஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் எது ?
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர் பிரார்த்தனை என்பது ஒரு வணக்கமாகும். பிரார்த்தனையின் மூலமாக மனிதன் இறைவனை நெருங்குகிறான். தனது தேவைகளை நேரடியாக முறைப்பாடு செய்து இறைவனோடு நேரடியாக பேசும் சந்தர்ப்பத்தை அல்லாஹ் மனிதனுக்கு ஏற்ப்படுத்தி கொடுத்துள்ளான். பொதுவாக எல்லா சந்தர்ப்பங்களிலும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யலாம். அதே நேரம் சில குறிப்பிட்ட இடங்கள், மற்றும் நேரங்களை நபியவர்கள் குறிப்பிட்டு இந்த நேரத்தில் உங்கள் ரப்பிடத்தில் கேளுங்கள் என்று நமக்கு …
Read More »பித்அத் தவிர்ப்போம்!
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலஃபி) “அஹ்லுஸ் ஸுன்னா”, “பிர்கதுன்னாஜியா” (வெற்றி பெற்ற பிரிவினர்), அத்தாயிபதுல் மன்ஸூரா (உதவி செய்யப்படும் குழுவினர்) என்றெல்லாம் சிறப்பித்துக் கூறப்படும் சுவனம் செல்லும் பிரிவினரின் பண்புகளில் பித்அத்தை விட்டும் விலகியிருப்பதும் ஒன்றாகும். பித்அத்தைத் தவிர்ப்பதும், அதை எதிர்ப்பதும் அஹ்லுஸ் ஸுன்னாவின் பண்பாகும். பித்அத்: “பித்அத்” என்பது ஓர் அறபுப் பதமாகும். “பதஅ” என்ற வினைச் சொல்லிலிருந்து இது உருவானதாகும். புதியது, முன்னுதாரணமின்றித் தோற்றுவிக்கப்பட்டது என்பன இதன் …
Read More »அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய செயல்கள்…..
அபூ ஹுனைப் ஹிஷாம் (மதனி) بسم الله الرحمن الرحيم அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய செயல்கள் பல உள்ளன. அவற்றை நாம் கண்டறிந்து செயற்படுவோமென்றால் அவனின் கருணை நிச்சயமாக எங்களையும் வந்தடையும். அந்தவிதத்தில் அல்லாஹ்வின் கருணையைத் தேடித்தரக்கூடிய சில செயல்களை இங்கு நாம் இனங்காட்டுகின்றோம். 01. படைப்பினங்கள் மீது கருணை காட்டல். அல்லாஹ்வின் படைப்புகள் மீது கருணை காட்டுவது அவனின் கருணையை எமக்குத் தேடித்தரும். நபியவர்கள் கூறினார்கள்: “பூமியில் உள்ளவர்களுக்கு …
Read More »