அகீதாமின்ஹாஜூல் முஸ்லிம்
பாகம் – 4
توحيد الأسماء والصفات
அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களும் பண்புகளும் :
اسم – பெயர் : اسماء – பெயர்கள்
அல்லாஹ்வின் பெயர்களில் சில :
جبار, خالق, سميع,بصير, رزاق,..
ان لله تسعة وتسعين اسما
அல்லாஹ்விற்கு 99 பெயர்கள் உள்ளன (புகாரி )ஆனால் அது எந்த பெயர்கள் என்பது நாம் அறிய மாட்டோம்.
திருநாமங்களும் பண்புகளும் :
سميع – கேட்பவன் (பெயர்) سمع – கேட்டல் (பண்பு)
بصير – பார்ப்பவன் (பெயர்) بصر – பார்த்தல் (பன்பு)
قدير – சக்தியுள்ளவன் (பெயர்) قدرة – சக்தி (பன்பு)
عزيز – கண்ணியமானவன் (பெயர்) عزة – கண்ணியம்
🔶இறைவனுடைய பெயர்களிலிருந்து பண்புகளை எடுக்கலாம் ஆனால் பண்புகளிலிருந்து பெயர்கள் இறைவனுக்கு நாம் சூட்ட முடியாது.
🔶 இறைவன் தனக்கு தானே சூட்டிய பெயர்களைத் தவிர வேறு பெயர்களை நாம் அவனுக்கு சூட்டக்கூடாது.
உதாரணம் : وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ ↔ 8:30 அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான்
இந்த வசனத்தை ஆதாரமாக வைத்து அல்லாஹ் ماكر (சூழ்ச்சி செய்பவன்) என்று அழைக்கக்கூடாது.
ஆகவே இறைவனின் எல்லாப்பெயர்களிலிருந்தும் அவன் பண்புகளை விளங்கலாம் ஆனால் இறைவனின் எல்லாப்பண்புகளிலிருந்தும் பெயர்களை விளங்க முடியாது.
🔶அல்லாஹ் பூரணத்துவமிக்கவன் ஆனால் அவன் சொல்லாததால் நாம் அவனை كامل (பூரணத்துவமிக்கவன்) என்று சொல்ல முடியாது.
🔶 அல்லாஹ்வின் பெயர்களும் பண்புகளுக்கும் உலகில் உள்ள யாருக்கும் ஒப்பாக இருக்காது என்று நாம் நம்ப வேண்டும்.
🔶 அல்லாஹ்வுடைய பெயர்களோ பண்புகளோ எவருக்கும் ஒப்பாக இருக்காது.
🔶அல்லாஹ்வின் பெயர்கள் பண்புகளுக்கு உதாரணம், மாற்றுவிளக்கம் போன்றவையெல்லாம் கொடுக்கக்கூடாது, கருத்து தெரியாது என்று கூறக்கூடாது,ஒப்பிட்டுக்கட்டுதல், ஒன்றுமில்லை என்றும் சொல்லக்கூடாது.
🌺அல்லாஹ் சிரிக்கிறான், ஆச்சரியப்படுகிறான், ரோஷப்படுகிறான், அவனுக்கு இருக்கைகள் இருக்கிறது என்றெல்லாம் அவனைப்பற்றி வரும் அறிவிப்புகளை எவ்வாறு நம்ப வேண்டும் ?
42:11 ↔ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ அவனைப்போன்று எதுவுமில்லை. ஆகவே அவனது பண்புகள் படைப்புகள் இவற்றின் பண்புகளைப்போலவும் அல்ல.
தவ்ஹீத்
- படைத்தவன் ஒருவன் மட்டுமே.
- படைத்தவன் எவனோ அவனை மட்டுமே வணங்க வேண்டும்.
- அவனுக்கு பெயர்கள் உண்டு பண்புகள் உண்டு அது யாரைப்போன்ற பெயரும் அல்ல யாருடைய பன்பைப்போன்றதும் அல்ல.
قل هو الله احد – படைத்தலில் அவன் தனித்தவன், நிர்வாகத்திலும் அவன் தனித்தவன், பெயர்களிலும் பண்புகளிலும் அவன் தனித்தவன் அனைத்திலும் அவன் தனித்தவன்.
எல்லா வகையிலும் அவன் ஒருவன்.
🔶 இறைவனை சரியாக வணங்க வேண்டும் என்பதை சரியாகப்புரிந்து கொள்வதற்காகவே இப்படி 3 ஆக பிரித்து நாம் படிக்கிறோம்.