Home / தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம் / குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 15

குதூஃபுன்தானியா (தபாரகல்லதீ ஜுஸ்வின் விளக்கம்) ஸூரதுல் முல்க் – வசனம் 15

هُوَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ ذَلُولًا فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِن رِّزْقِهِ ۖ
وَإِلَيْهِ النُّشُورُ﴿١٥﴾
(அவனே பூமியைப் (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்! அவனது உணவை உண்ணுங்கள். அவனிடமே திரட்டப்படுதல் உள்ளது). அல்முல்க் – 15  
தொழில் வியாபார நோக்கமாக பூமியில் நீங்கள் நாடிய பகுதிக்கு பயணம் செய்யுங்கள். அல்லாஹ் அப்பூமியை உங்களுக்கு எளிதாக ஆக்காவிடின் உங்கள் முயற்சிகள் உங்களுக்கு எவ்விதப் பயனையும் தராது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் கூறுகிறான்:
(அவனது உணவை உண்ணுங்கள்)
எமது தேவைகளை நிறைவேற்ற அதற்குரிய காரணங்களை, முயற்சிகளை  நாம் செய்யவேண்டும். அவ்வாறு செய்வது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதை நீக்கிவிடாது.
இக்கருத்தை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
நீங்கள் அல்லாஹ் மீது உண்மையான நம்பிக்கை வைத்தால் அவன் பறவைகளுக்கு உணவளிப்பது போல் உங்களுக்கும் உணவளிப்பான். அவைகள் காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பியதாக வருகின்றன” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
                                   அறிவிப்பாளர்: உமர் (ரழி).             
                                   நூல்: திர்மிதி, நஸாஈ.
     
இந்த ஹதீஸில் பறவைகள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்த நிலையில் காலையில் வெறும் வயிற்றுடன் சென்று மாலையில் வயிறு நிரம்பி வருகின்றனஎன கூறப்பட்டுள்ளது. எனவே போவதும், வருவதும் அவைகள் செய்யும் முயற்சியாகும். அவன் தான் அம்முயற்சியை நிறைவேற்றிக் கொடுக்கிறான். காரணம் அவன் மீது நம்பிக்கை வைத்தலாகும்.
அல்லாஹ் பூமியை எளிதாக்கி வைத்துள்ளதைப் பற்றி பின்வரும் வசனத்தில் கூறுகின்றான்:
(இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும் மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்). அந்நாஸிஆத் – 30,31.
இப்பூமியில் உணவைப் பெற்றுக் கொள்வதையும் இலகுவாக்கியுள்ளான்.
மேலும் அல்லாஹ் கூறுகிறான்:  
(உயிருடன் உள்ளோரையும், இறந்தோரையும் அணைத்துக் கொள்ளக் கூடியதாக பூமியை ஆக்கவில்லையா?அல் முர்ஸலாத் – 25, 26.
மனிதர்கள் எவ்வாறு தான் பூமியில் சுற்றித் திரிந்த போதிலும் அவனிடமே செல்ல வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
(நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்வோர்) அஸ் ஸூக்ரூஃப் – 14.

Check Also

தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ்| பாகம் 68 |الحديث المقطوع அல் ஹதீஸ் அல் மக்தூஃ

அஷ்ஷேக் கலாநிதி ரிஷாத் ரியாதி (PhD) தய்ஸீரு முஸ்தலஹில் ஹதீஸ் | பாகம் 68 | الحديث المقطوع அல் …

Leave a Reply