حلية طالب العلم
கல்வி கற்பவர்கள் பேணவேண்டிய பண்புகள்
பாகம் – 16
வீண் விவாதங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
❤ ஸூரத்துல் ஃபுர்ஃகான்25:63
وَعِبَادُ الرَّحْمَٰنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامً
இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் “ஸலாம்” (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.
🌹குர்ஆன் சுன்னா வாழ்க்கையின் அடிப்படையாக இருக்க வேண்டும்
🌹இஸ்லாமிய கல்வியில் ஒவ்வொரு துறையின் அடிப்படைகளையும் தெரிந்திருக்க வேண்டும்
🌹ஃபிக்ஹை படிப்பதற்கு முன் அதன் அடிப்படையான உஸூலுல் ஃபிக்ஹை படிக்க வேண்டும். அல்லது இதில் எதை முதலில் கற்பது என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன