அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
பாகம் – 132
அறிஞர்கள் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
- அவர்களை விரும்ப வேண்டும்
- அவர்களுடைய ரஹ்மத்துக்காக துஆ செய்ய வேண்டும்
- அவர்களுக்காக பாவமன்னிப்பு தேட வேண்டும்
قال رسول الله صلى الله عليه وسلم خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين
يلونهم
♦️ இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – நபி (ஸல்) – சமுதாயத்தில் சிறந்தவர்கள் என்னுடைய சமுதாயம் அதற்கு பின்னால் அவர்களை தொடர்ந்து வரக்கூடியவர்கள் பின்னர் அவர்களை தொடர்ந்து வரக்கூடியவர்கள்(புஹாரி)
ஸூரத்துல் ஹஷ்ர் 59:10 அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக; அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன்; கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.
💫 அவர்களைப்பற்றி நல்ல முறையில் பேச வேண்டும்.
💫 இமாம் மாலிக், இமாம் ஷாஃபீ, இமாம் அஹ்மத், இமாம் அபூ ஹனீஃபா போன்ற இமாம்கள் குர்ஆன் சுன்னாவிலிருந்து அவர்களுக்கு கிடைத்த அறிவிலிருந்தே பேசினார்கள்.
💫 அவர்களின் வழிகாட்டல்கள் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். (தக்லீத்)கண்மூடித்தனமாக பின்பற்றல் அவர்களை மதிப்பதாக ஆகாது.
💫 மார்க்க விஷயங்களில் அவர்களின் பிழைகளை சரியான முறையில் புரிந்து கொள்ளல்.