Home / FIQH / ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -2

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும் – தொடர் -2

_ மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி

இஹ்ராமுடன் தொடர்புடைய சில தவறுகள்:

1. இஹ்ராம் என்பது ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக குறிப்பிட்ட எல்லைகளில் நிய்யத் வைத்து நுழைவதை குறிக்கும் ஆனால் சிலர் வெண்மையான ஆடையை குறிப்பதாக கருதுகின்றனர் இதுவும் தவறு .

2 . எல்லா வணக்க வழிபாடுகளுக்கும் நிய்யத் மிக முக்கியம் நபி (ஸல்) கூறினார்கள் செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்து அமைகிறது ….. புகாரி 6439 எனவே ஹஜ்ஜுக்கும் உம்ராவிற்கும் செல்வபவர் நிய்யத் வைத்துக் கொள்ள வேண்டும். நிய்யத் என்பது வாயால் மொழிவதல்ல உள்ளத்தால் எண்ணுவது .

3.நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு பகுதியினருக்கும் இஹ்ராமிற்குரிய எல்லைகளை நிர்ணயம் செய்துள்ளார்கள் .

(ஹஜ்- உம்ராவுக்காக புறப்பட்டு) மதீனா வழியாக் மக்காவுக்கு வரும் மக்களுக்கு துல்-ஹூலைஃபாவும் ஸிரியா வழியாக வரும் மக்களுக்கு அல்-ஜூஹ்ஃபாவும் நஜ்தின் வழி வருபவர்களுக்கு (தாயிஃப்) கா;னுல் மனாஸிலும் யமனிலிருந்த வருபவர்களுக்கு யலம்லம் ஆகியவை இஹ்ராம் மேற்கொள்ள வேண்டிய மீக்காத் எல்லைகளாகும்.

இவ்வெல்லைகளுக்குள்ளே வசிப்பவர்களுக்கும் மக்கா வாசிகளுக்கும் அவர்களின் இல்லங்களே எல்லைகளாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினாரிகள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 1454. முஸ்லிம் 1181

இஹ்ராமிற்குரிய எல்லைகளில் இஹ்ராமில் பிரவேசிக்காமல் ஹஜ்ஜுக்கு முறையாக அனுமதி பெறாமல் அரசாங்கத்தை ஏமாற்றி விட்டு செல்வது. சில ஹாஜிகளிடத்தில் இத்தவறு ஏற்படுகிறது . இத்தவறை செய்பவர்கள் மீண்டும் தங்களுக்குரிய எல்லைகளுக்கு சென்று இஹ்ராமில் பிரவேசிக்க வேண்டும் அல்லது ஒரு ஆடு மக்காவில் ஃ பித்யாவாக கொடுக்க வேண்டும். அதன் இறைச்சி மக்காவில் உள்ள ஏழைகளுக்கு பங்கிட வேண்டும். அதிலிருந்து இவர் எதையும் உண்ணகூடாது.

5. ஃபர்ளான தொழுகையாக இருந்தாலே தவிர இஹ்ராமில் பிரவேசித்தவர் இரண்டு ரக்க அத் தொழுவது கடமை என கருதுவது தவறாகும். இதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.

6.ஆண்களுக்கு ஒப்பாக பெண்கள் வெள்ளை நிற ஆடை அணிவது இது தடுக்கப்பட்ட ஒன்றாகும் . ஆண்களைப்போன்று பெண்களுக்கு இஹ்ராமிற்கென்று பிரத்தேகமாக எந்த ஆடையும் இல்லை . அதே வேளையில் பெண்கள் எப்போதும் தங்களின் ஆடைகளில் இஸ்லாமிய வழிமுறைகளை பேண வேண்டும். முழு உடலையும் மறைக்கக் கூடிய இறுக்கமில்லாத, வேலைப்பாடுகளில்லாத, ஆடைகளாக இருக்க வேண்டும்.
ஆணுக்கு ஒப்பாக பாவனை செய்வது பொதுவாகவே தடுக்கப்பட்டது. .
பெண்களைப் போலவே நடக்கும் ஆண்களையும் ஆண்கள் போல நடக்கும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்’ எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 5885 )

7. ஒரு பெண் இஹ்ராமுக்குரிய எல்லையை வந்தடைந்து அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அவளும் குளித்து சுத்தம் செய்து உம்ராவிற்குரிய அல்லது ஹஜ்ஜுக்குரிய நிய்யத்தை வைத்துக் கொள்ள வேண்டும் . சிலர் மாதவிடாய் பெண்கள் இஹ்ராமில் பிரவேசிக்க முடியாது என கருதுகின்றனர். இதுவும் தவறாகும். இப்பெண்கள் தவாஃபைத் தவிர அனைத்து வழிபாடுகளிலும் ஈடுபடலாம்.

8. துல் ஹஜ் 8 ஆவது நாள் மஸ்ஜிதில் ஹராமிலிருந்து இஹ்ராமில் பிரவேசிக்க வேண்டும் என சில ஹாஜிகள் கருதுகின்றனர். இதுவும் தவறாகும். ஹாஜிகள் மக்காவில் எந்த பகுதியில் இருக்கின்றார்களோ அந்தப் பகுதியிலிருந்து இஹ்ராமில் பிரவேசிக்கலாம் . ஸஹாபாக்களில் சிலர் அப்தஹ் என்ற பகுதியிலிருந்து இஹ்ராமில் பிரவேசித்துள்ளார்கள் .

9. இஹ்ராமில் இழ்திபாவின் நிலை : இஹ்ராமில் இருப்பவர் வலது தோள் புஜத்தை திறந்த நிலையில் இருப்பது இழ்திபா ஆகும் . இது தவாஃபுல் குதூமிற்கு (ஹஜ்ஜின் ஆரம்ப தவாஃப்) மட்டுமே. ஆனால் ஹாஜிகளின் அதிகமானவர்கள் ஹஜ்ஜின் கிரிகைகள் முடியும் வரை வலது தோள் புஜத்தை திறந்த நிலையிலேயே இருக்கின்றனர் இதுவும் தவறாகும். சிலர் தொழுகையின் போதும் தோள் புஜத்தை திறந்த நிலையிலேயே தொழுகின்றனர் இதுவும் மிகப் பெரும் தவறாகவும்.

10.சிலர் இஹ்ராமின் ஆடைகளை மாற்றக் கூடாது அல்லது சுத்தம் செய்யக் கூடாது என கருதுகின்றனர். இதுவும் சில ஹாஜிகளிடத்தில் ஏற்படும் தவறாகும். ஹஜ் , உம்ரா செய்பவர் இஹ்ராமின் ஆடைகளை மாற்ற வேண்டும் அல்லது கழுவி சுத்தப்படுத்த வேண்டும் என்று கருதினால் தாராளமாக செய்யலாம்.

11. தவாஃபின் ஏழு சுற்றுகளிலும் வேகமாக நடப்பது அல்லது ஓடுவது இதுவும் ஹாஜிகளிடம் ஏற்படும் தவறாகும் . நபி (ஸல்) அவர்கள் முதல் மூன்று சுற்றுகளில்தான் எட்டுக்களை விரைவு படுத்தி உள்ளார்கள் மீதமுள்ள நான்கு சுற்றுகளிலும் நடந்தே சென்றுள்ளார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர்( ரலி ), நூல் :அபூதாவூத் 1893 (பெண்கள் எந்த இடங்களிலும் ஓடக் கூடாது.)

12. இஹ்ராமில் பிரவேசித்த பிறகு அதிகம் தல்பியா சொல்லாமல் அல்டசியாமாக இருப்பது. இதுவும் தவறாகும் (யவ்முன் நஹ்ர்) அதாவது துல் ஹஜ் பத்தாவது நாள் ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிகின்றவரை அதிகம் தல்பியா சொல்ல வேண்டும்.

13. இஹ்ராமுக்குரிய ஆடைகளை அணிந்த பிறகு வேறு எதுவும் அணியக் கூடாது என்றும் சிலர் கருதுகின்றனர் இதுவும் தவறாகும். செருப்பு , மோதிரம் , கைக்கடிகாரம் , பெல்ட் , கண்ணாடி …. போன்றவைகளை அனைத்து கொள்ளலாம் தைக்கப்பட்ட ஆடைகளை அணியாக கூடாது.

14. இஹ்ராமில் பிரவேசித்த பெண்கள் நிகாப் , (முகத்திரை ) மற்றும் கை உறைகளை அணியாக கூடாது இந்தத் தவறு அதிகமான பெண்களிடத்தில் காணப்படுகிறது சுன்னா அதனை அணியாமல் இருப்பதாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இஹ்ராமிலுள்ள பெண்கள் நிகாப் , (முகத்திரை ) மற்றும் கை உறைகளை அணியாக கூடாது . அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவூத் 1825

15. தல்பியாவில் பெண்கள் சப்தத்தை உயர்த்துவது இதுவும் ஹாஜிகளிடத்தில் ஏற்படும் தவறாகும். ஒரு பெண் தன்னளவில் கேட்கும்படி தல்பியா சொல்லிக்கொள்வது விரும்பத்தக்க விஷயமாகும்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

Check Also

ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் குத்பா பேருரை

ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் குத்பா பேருரை அஷ்ஷைக் நூஹ் அல்தாஃபி ரியாத் மாநகரில் ஈதுல் அழ்ஹா ஹஜ் பெருநாள் …

Leave a Reply