Home / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் / எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-9)

எறும்பு மற்றும் ஹுத்ஹுத் பறவையின் சம்பவத்திலிருந்து நூறு படிப்பினைகள் (படிப்பினை-9)

9 வது படிப்பினை
உபகாரங்களுக்கு நன்றி செலுத்தும்
சந்தர்ப்பமும் அல்லாஹ்வின் புறத்திலிருந்தே.
(وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ) (النمل: 19)
யா அல்லாஹ்! நீ எனக்குப் புரிந்துள்ள உனது அருளுக்கு நன்றி செலுத்த எனக்கு உதவி புரிவாயாக! என அவர் கூறினார், (27:19)
எறும்பு தனது இனத்துடன் செய்த உரையாடலை அல்லாஹ்தஆலா சுலைமான் (அலை) அவர்களுக்குக் கேட்கச் செய்து,விளங்கவைத்த போது அது அல்லாஹ் தன்மீது செய்த அருட்கொடையே என்பதை உணர்ந்து இதற்கு முன்னும் தனது தந்தை தாவூத் (அலை) அவர்களுக்குச் செய்த அருட்கொடைகளையும் நினைவு கூர்ந்தார்கள். மேலும் அவ் அருட்கொடைகளுக்கு நன்றிசெலுத்த அநுகூலம் புரியுமாறும்,அதனை இலகுவாக்கித் தருமாறும் இறைஞ்சினார்கள். ஏனெனில் நன்றிசெலுத்தும் வாய்ப்பை வழங்குவதும் அவனே.
தாவூத் (அலை) அவர்கள் கூறினார்கள்: யா அல்லாஹ்! நான் உனக்கு நன்றி செலுத்துவதும் நீ எனக்குச் செய்யும் அருளாக இருக்கும் நிலையில்,உனக்கு நான் எவ்வாறு நன்றி செலுத்துவது? அதற்கு அல்லாஹ் அதனை நீர் விளங்கியிருந்தால் அதுவே நீர் எனக்குச் செய்யும் நன்றிக் கடனாகும். எனக் கூறினான். (தப்ஸீர் அல் குர்துபி,இப்னு கஸீர்)
ஷத்தாத் இப்னு அவ்ஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் தனது தொழுகையில் பின்வருமாறு இறைஞ்சுவார்கள். யாஅல்லாஹ்! காரியத்தில் நிலைப்பாட்டையும்,நேர்வழியில் உறுதியையும்,உன்னிடம் கேட்கிறேன். மேலும் உனது அருள்களுக்கு நன்றி செலுத்தும் தன்மையையும் உன்னை நல்லமுறையில் வணங்குவதையும் உன்னிடத்தில் கேட்கிறேன். மேலும் தூய்மையான உள்ளத்தையும்,உண்மையுரைக்கும் நாவையும் கேட்கிறேன். மேலும் நீ அறிந்தவற்றின் நலவையும் கேட்கிறேன். மேலும் நீ அறிந்தவற்றின் தீங்கை விட்டும் உன் மூலம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ அறிந்தவற்றிற்காக பாவமன்னிப்பும் தேடுகிறேன். (அந் நஸாஈ)
எனவே அல்லாஹ்விடமிருந்து அபிவிருத்தியைப் பெறுவதற்கான திறவுகோலான நன்றியுணர்வு முஸ்லிமான தாஇக்கு மிகவும் அவசியமாகும். அல்லாஹ் கூறுகிறான்: ((நீங்கள் நன்றி செலுத்தினால் நிச்சயமாக நான் உங்களுக்கு அதிகரிப்பேன்.)) ((இப்ராஹீம்:08))
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(اللهم ما أصبح بي من نعمة أو باحد من خلقك فمنك وحدك لا شريك لك فلك الحمد ولك الشكر)

 

யா அல்லாஹ்! இக்காலை வேளையில் எனக்கு என்னென்ன அருட்கொடைகள் கிடைத்துள்ளனவோ அது உன்புறத்திலிருந்து மாத்திரமே. உனக்கு எந்த இணையும் இல்லை. எனவே உனக்கே அனைத்துப் புகழும்,நன்றியும்)) என்று காலையில் யார் கூறுவாரோ,அவர் அன்றைய பகலின் நன்றியைச் செலுத்திவிட்டார். மேலும் யார் அதேபோன்று மாலையில் கூறுவாரோ அவர் தனது இரவின் நன்றியைப் பூர்த்தி செய்துவிட்டார். ((அபூதாவூத்:4411))
எனவே நன்றிசெலுத்துவது இருக்கும் நிஃமத்தைப் பாதுகாப்பது மாத்திரமின்றி இல்லாத நிஃமத்தையும் பெற்றுத்தரவல்லது. நன்றி செலுத்தாமை நிஃமத்தை இழப்பதற்கும்,கோபம் இறங்குவதற்கும்,அதிகரிப்புத் தடையாவதற்கும் காரணமாக அமையும்.
தொடரும்……

Check Also

சமகால மார்க்க தீர்ப்புகள்|கால் உறை மீது மஸஹ் செய்வதின் சட்டம் என்ன?|Asshiek Abdullah Uwais Meezani |

கால் உறை மீது மஸஹ் செய்வதின் சட்டம் என்ன? | சமகால மார்க்க தீர்ப்புகள் | அஷ்ஷேக் அல் ஹாபிள் …

Leave a Reply