அகீதா
இறைவன் கேட்கும் சில கேள்விகள்!?
பாகம் – 8
✥ ஸூரத்துல் வாகிஆ 56: 58, 59, 60, 63, 64, 65, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76
(58). (கர்ப்பப் பையில்) நீங்கள் செலுத்தும் இந்திரியத்தைக் கவனித்தீர்களா?
(59). அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?
(60). உங்களுக்கிடையில் மரணத்தையும் நாமே ஏற்படுத்தியுள்ளோம்; எனவே நம்மை எவரும் மிகைக்க முடியாது.
(63). (இப்பூமியில்) விதைப்பதை நீங்கள் கவனித்தீர்களா?
(64). அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் முளைக்கச் செய்கின்றோமா?
(65). நாம் நாடினால் திட்டமாக அதனைக் கூளமாய் ஆக்கிவிடுவோம் – அப்பால் நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள்.
(68). அன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா?
(69). மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா?
(70). நாம் நாடினால், அதை உப்பாக ஆக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
(71). நீங்கள் மூட்டும் நெருப்பை கவனித்தீர்களா?
(72). அதன் மரத்தை நீங்கள் உண்டாக்கினீர்களா? அல்லது நாம் உண்டு பண்ணுகிறோமா?
(73). நாம் அதனை நினைவூட்டுதாகவும், பயணிகளுக்கு பயனளிப்பதற்காகவும் உண்டாக்கினோம்.
(74). ஆகவே, மகத்தான உம்முடைய ரப்பின் திருநாமத்தைக் கொண்டு தஸ்பீஹு செய்வீராக.
(75). நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்.
(76). நீங்கள் அறீவீர்களாயின் நிச்சயமாக இது மகத்தான பிரமாணமாகும்.