தொழுகையாளிகளே! உங்களுக்காக காத்திருக்கும் எண்ணற்ற நற்பாக்கியங்கள் – தொடர் 1
தொகுப்பு: அஸ்ஹர் யூஸுபஃ ஸீலானி
உலகில் தொழுகையாளிகளாக இருந்தவர்கள் மாத்திரமே மறுமையில் ஸுஜுத் செய்யுமாறு அழைக்கப்பட்டவுடன் ஸுஜுதில் விழுவார்கள் என்ற சுபச் செய்தி:
“கெண்டைக் காலை விட்டு (திரை) அகற்றப்படும் நாளில் ஸுஜூது செய்யுமாறு (மக்கள்) அழைக்கப்படும் நாளில் (இவ்வுலகில் மாறு செய்த) அவர்கள் அதற்கும் இயலாதி ருப்பார்கள். அவர்களுடைய பார்வைகள் கீழ் நோக்கியவையாக இருக்கும் நிலையில் இழிவு அவர்களை மூடிக்கொள்ளும்; அவர்களோ (உலகில்) திடமாக இருந்த போது ஸுஜூது செய்யுமாறு அழைக்கப்பட்டுக் கொண்டுதானி ருந்தனர். (ஆனால் அப்போது அலட்சியமாக இருந்தனர். ”
(அல்கலம் 68: 42, 43)