Home / Quran / குர்ஆன் தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை / அத்தியாயம் 90 அல் பலத் (அன் நகரம்) வசனங்கள் 20

அத்தியாயம் 90 அல் பலத் (அன் நகரம்) வசனங்கள் 20

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
لَا أُقْسِمُ بِهَـٰذَا الْبَلَدِ ﴿١
1) இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
لَا
أُقْسِمُ
بِهَـٰذَا الْبَلَدِ 
இல்லை
நான் சத்தியம் செய்கின்றேன்
இந்நகரத்தின் மீது
குறிப்பு: இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் ஒரு   لَاஉள்ளது அதற்கு இல்லை என்பது
பொருள்ஆனால் இந்த இடத்தில் அதற்கு பொருள் கொள்ளக் கூடாதுஇப்படி அரபுகள்  பயன்படுத்துவது பழக்கம் அதுபோன்றே அல்லாஹ்வும் கூறியுள்ளான். நாமும் கூட பேசும் போது அப்படியெல்லாம் இல்லை என்று ஆரம்பிக்கும் பழக்கமிருக்கிறது.
 وَأَنتَ حِلٌّ بِهَـٰذَا الْبَلَدِ ﴿٢
2) நீர் இந்நகரத்தில் தங்கியிருக்கும் நிலையில்
وَأَنتَ
حِلٌّ
بِهَـٰذَا الْبَلَدِ
நீர்
தங்கியிருப்பது
இந்நகரத்தில்
 وَக்கு இன்னும்மேலும்சத்தியமாக என்ற பொருள் இருப்பதுபோல நிலையில் என்ற
பொருளும் வரும். وَأَنتَ حِلٌّ بِهَـٰذَا الْبَلَدِ  நீர் இந்நகரத்தில் தங்கியிருக்கும் நிலையில்
என்பதிளுள்ளது போல.
 وَوَالِدٍ وَمَا وَلَدَ ﴿٣
3) பெற்றோர் மீதும், சந்ததியின் மீதும் சத்தியமாக
وَ
وَالِدٍ
وَ
مَا وَلَدَ
இன்னும்
பெற்றோர்
இன்னும்
சந்ததிகள் (பிள்ளைகள்)
 لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي كَبَدٍ ﴿٤ 
4) திடமாகநாம் மனிதனைக் கஷ்டத்தில் (உள்ளவனாகப்) படைத்தோம். 
لَقَدْ
خَلَقْنَا
الْإِنسَانَ
فِي كَبَدٍ
திடமாக
நாம் படைத்தோம்
மனிதன்
கஷ்டத்தில்
أَيَحْسَبُ أَن لَّن يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ ﴿٥
5) ‘ஒருவரும்தன் மீது சக்தி பெறவே மாட்டார்‘ என்று அவன் எண்ணிக் கொள்கிறானா
أَيَحْسَبُ
     أَن لَّن يَقْدِرَ     
عَلَيْهِ
أَحَدٌ
அவன் எண்ணுகிறானா?
நிச்சயம் சக்தி பெறமாட்டான்
அவன் மீது
ஒருவரும்
 يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُّبَدًا ﴿٦ 
 6) ஏராளமான பொருளை நான் அழித்தேன்” என்று அவன் கூறுகிறான்.
يَقُولُ
أَهْلَكْتُ
مَالًا
لُّبَدًا
அவன் கூறுகிறான்

நான் அழித்தேன்
பொருள்
ஏராளமான
أَيَحْسَبُ أَن لَّمْ يَرَهُ أَحَدٌ ﴿٧
7) தன்னை ஒருவரும் பார்க்கவில்லையென்று அவன் எண்ணுகிறானா?
أَيَحْسَبُ
أَن لَّمْ يَرَهُ
أَحَدٌ
கருதுகிறான்
தன்னைப் பார்க்கவில்லை
ஒருவரும்
 أَلَمْ نَجْعَل لَّهُ عَيْنَيْنِ ﴿٨
8) அவனுக்கு இரண்டு கண்களை நாம் ஆக்கவில்லையா?
أَلَمْ نَجْعَل
لَّهُ
عَيْنَيْنِ
நாம் ஆக்கவில்லையா?
அவனுக்கு
இரண்டு கண்கள்
 وَلِسَانًا وَشَفَتَيْنِ ﴿٩
9) மேலும் நாவையும்இரண்டு உதடுகளையும் (ஆக்கவில்லையா)?
وَ
لِسَانًا
وَ
شَفَتَيْنِ
இன்னும்
 நாக்கு
இன்னும்
இரண்டு உதடுகள்
 وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ ﴿١٠
10) அன்றியும் (நன்மைதீமையாகிய) இருபாதைகளை நாம் அவனுக்குக் காண்பித்தோம்.
وَ
هَدَيْنَاهُ
النَّجْدَيْنِ
இன்னும்
நாம் அவனுக்குக் காண்பித்தோம்
இருபாதைகள்
 فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ﴿١١
11) ஆயினும்அவன் கணவாயைக் கடக்கவில்லை.
فَلَا اقْتَحَمَ
الْعَقَبَةَ 
கடக்கவில்லை
கணவாய்
 وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ﴿١٢
12) (நபியே!) கணவாய் என்பது என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?. 
مَا أَدْرَاكَ
مَا
الْعَقَبَةُ
உமக்கு எது அறிவித்தது
என்ன
கணவாய்
 فَكُّ رَقَبَةٍ ﴿١٣
13) (அது) ஓர் அடிமையை விடுவித்தல்- 
فَكُّ
رَقَبَةٍ
விடுவித்தல்
அடிமை
 أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ ﴿١٤
14) அல்லதுபசித்திருக்கும் நாளில் உணவளித்தலாகும்.  
أَوْ
إِطْعَامٌ
فِي يَوْمٍ
ذِي مَسْغَبَةٍ
அல்லது
உணவளித்தல்
நாளில்
பசி உடைய
 يَتِيمًا ذَا مَقْرَبَةٍ ﴿١٥ 
15) உறவினனான ஓர் அநாதைக்கோ
يَتِيمًا
ذَا مَقْرَبَةٍ
 அநாதை
சொந்தமுடையோர்
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ ﴿١٦
16) அல்லது (வறுமை என்னும்) மண்ணில் புரளும் ஓர் ஏழைக்கோ (உணவளிப்பதாகும்).
أَوْمِسْكِينًا
ذَا مَتْرَبَةٍ
 அல்லது ஏழை
மண்ணில் புரளும்
 ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ﴿١٧
17) பின்னர்ஈமான் கொண்டுபொறுமையைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசித்தும்கிருபைசெய்ய வேண்டுமென ஒருவருக்கொருவர் உபதேசித்தும் வந்தவர்களில் இருப்பதுவும் (கணவாயைக் கடத்தல்) ஆகும்.  
ثُمَّ
كَانَ
مِنَ الَّذِينَ
آمَنُوا
பின்னர்
ஆகிவிட்டான்
சிலரிலிருந்து
ஈமான் கொண்டார்கள்
                                                                                   
وَتَوَاصَوْا
بِالصَّبْرِ
ஒருவருக்கொருவர் உபதேசித்தார்கள்
பொறுமையைக் கொண்டு
وَتَوَاصَوْا
بِالْمَرْحَمَةِ
ஒருவருக்கொருவர் உபதேசித்தார்கள்
கிருபைசெய்ய வேண்டுமென
 أُولَـٰئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ ﴿١٨
18) அத்தகையவர் தாம் வலப்புறத்தில் இருப்பவர்கள்.
أُولَـٰئِكَ
أَصْحَابُ
الْمَيْمَنَةِ
அவர்கள்
உடையவர்கள்
வலப்புறம்
 وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ﴿١٩
19) ஆனால்எவர்கள் நம் வசனங்களை நிராகரிக்கிறார் களோஅவர்கள் தாம் இடப்பக்கத்தையுடையோர். 
وَالَّذِينَ كَفَرُوا
       بِآيَاتِنَا      
நிராகரித்தார்களே அவர்கள்
நமது வசனங்களை
هُمْ
أَصْحَابُ
الْمَشْأَمَةِ
அவர்கள்
உடையவர்கள்
இடப்பக்கம்
 عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ ﴿٢٠
அவர்கள் மீது (எப்பக்கமும்) மூடப் பட்ட நெருப்பு இருக்கிறது. 
\
                                                                                   
       عَلَيْهِمْ     
نَارٌ
مُّؤْصَدَةٌ
அவர்கள் மீது
நெருப்பு
மூடப்பட்டது

Check Also

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

குர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை – ஸுரத்துல் இஹ்லாஸ் (112)

One comment

  1. assalamu alaikum we want word to word tamil in 29,28juz,and more pls make it soon as possible because we are memorizing it is very helpful to us allah will grand you all jannah in sha allah. jajakallah khair.

Leave a Reply