Read Only / அகீதா – தவ்ஹீத் PDFஅகீதா – தவ்ஹீத் PDF
அகீதா – தவ்ஹீத் PDF(Download)
2 : 102 வசனத்தில் ஃப ஸப்பிய்யா என்பது சரியா? பிஜே அவர்களின் தவறான மொழிபெயர்ப்பு
———————————————————————————–
சூனியத்தை மறுக்க்க்கூடியவர்கள் தங்களுக்கு பொருத்தமாக வசனத்தை மட்டுமல்லாமல் இலக்கணத்தையும் மாற்றிக்கொண்டார்கள்.
விளைவு அல்லாஹ் அதையும் பொய் என்று வெளிப்படுத்தியுள்ளான்.
இலக்கண விதி
—————————
تأتي الفاء للسببية الناصبة للفعل المضارع بأن مضمرة وجوباً
நஸபு செய்யும் காரணத்திற்குரிய ஃப என்பதாகிறது எதிர்கால வினைச்சொல்லிற்கு மறைவான “அன்” ஐக் கொண்டு கட்டாயமாக வரும்.
அதாவது ஃப வுக்கு முன்னால் உள்ள ஒன்று ஃப வுக்கு பின்னால் உள்ள வினைச்சொல்லிற்கு காரணமாக அமையும். அப்படியிருந்தால் ஒருமையின் வினைச்சொல் அமைப்பிற்கு நஸபு(ஃபதஹ்) செய்யும். இருமை , பன்மையின் நூன்கள் விழுந்துவிடும்.. பெண்பால் ஒருமையின் நூனும் விழுந்துவிடும். பெண்பால் பன்மைக்கு மட்டும் நூன்கள் விழாது.
உதாரணமாக 2 : 102 வசனத்தில் உள்ள பீஜே எதை ஃப என்பது ஸப்பிய்யா என்று வாதிகிறாரோ அதே வார்த்தையைப் பார்ப்போம்.
அசல் வடிவத்தில் வினைச்சொல்
يَتَعَلَّمُ يَتَعَلَّمَانِ يَتَعَلَّمُونَ
تَتَعَلَّمُ تَتَعَلَّمَانِ يَتَعَلَّمْنَ
تَتَعَلَّمُ تَتَعَلَّمَانِ تَتَعَلَّمُونَ
تَتَعَلَّمِينَ تَتَعَلَّمَانِ تَتَعَلَّمْنَ
أَتَعَلَّمُ نَتَعَلَّمُ
ஃப ஸபபிய்யாவாக இருந்தால் வினைச்சொல் வடிவம்
يَتَعَلَّمَ يَتَعَلَّمَا يَتَعَلَّمُوا
تَتَعَلَّمَ تَتَعَلَّمَا يَتَعَلَّمْنَ
تَتَعَلَّمَ تَتَعَلَّمَا تَتَعَلَّمُوا
تَتَعَلَّمِيْ تَتَعَلَّمَا تَتَعَلَّمْنَ
أَتَعَلَّمَ نَتَعَلَّمَ
ஃப என்ற அரபு எழுத்து காரணத்திற்காக வருமானால் அதற்கு அடுத்ததாக வரும் எதிர்கால வினைச்சொல்லுக்கு நஸப் (சாதாரண மக்களுக்கும் புரிய வேண்டும் என்றால் ஃபதஹ் என்று சொல்வார்கள்) செய்வார்கள். இதுதான் இலக்கண விதி.
ஃப வுக்கு முன்னால் உள்ள வாரத்தை எதிர்மறையாகவோ , எதிர்மறை கட்டளையாகவோ , விருப்பமாகவோ இருந்தாக வேண்டும்.
குர்ஆனில் உள்ள சில உதாரணங்கள்.
قَالَ لَهُمْ مُوسَى وَيْلَكُمْ لَا تَفْتَرُوا عَلَى اللَّهِ كَذِبًا فَيُسْحِتَكُمْ بِعَذَابٍ وَقَدْ خَابَ مَنِ افْتَرَى (61 –
20
(அப்பொழுது) மூஸா சூனியக்காரர்களிடம் “உங்களுக்குக் கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள் , (அவ்வாறு செய்தால்) அவன் வேதனையினால் உங்களை அழித்து விடுவான். எவன் பொய்யை இட்டுக் கட்டுகிறானோ , திடனாக அவன் (நற்பேறு கெட்டு) அழிந்து விட்டான்” என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 20 : 61)
இந்த குர்ஆன் வசனத்தில் மூஸா(அலை) அவர்கள் சூனியக்காரர்களைப் பார்த்து “இட்டுக்கட்டாதீர்கள்” என்று எதிர்மறைக் கட்டளையாகக் கூறுகிறார்கள். அதற்கு அரபியில் “லா தஃப்தரு” என்று வந்துள்ளது. அதற்கு “அழித்துவிடுவான்” என்று வருகிறது. அரபியில் “ஃபயுஸ்ஹித” என்று வந்துள்ளது. அதாவது இட்டுக்கட்டாதீர்கள் (இட்டுக்கட்டினால்) , அல்லாஹ் அழித்துவிடுவான் என்று மூஸா(அலை) அவர்கள் கூறுகிறார்கள். ஃப வுக்கு பின் உள்ள வினைச்சொல்லிற்கு வார்த்தைக்கு நஸபு(ஃபதஹ்) செய்துள்ளது. இங்கு பயன்படுத்தப்பட்டிருப்பது காரணத்திற்குரிய ஃப ஆகும்.
தற்போது விஷயத்திற்கு வருவோம்.
உதாரணமாக
2 : 102 வசனத்தில் ஃவுக்கு முன்னால் உள்ள வார்த்தை எதிர்மறை கட்டளையாக உள்ளது. “ரா தக்ஃபுர்” என்று. நீ நிராகரித்து விடாதே என்பது இதன் பொருள். நிராகரித்துவிடாதே.( நீ நிராகரித்துவிட்டால்) . . .
இதற்கு என்ன பதில் குர்ஆனில் வருகிறது ?
ஃப என்பது ஸப்பிய்யாவாக இருந்தால் இதற்கு பதில் வந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் வரவில்லை.
மாறாக அவர்கள் கற்றுக்கொள்வார்கள். நீ நிராகரித்துவிட்டால் என்பதற்கு பதிலாக அவர்கள் கற்றுக்கொள்வார்கள் என்று பொருத்தமில்லாமல் அல்லாஹ் பேசுவானா?
இன்னும் ஃப ஸபபிய்யாவாக இருந்தால்
فَيَتَعَلَّمُوا
என்று இருந்திருக்கும்.
ஆனால்
فَيَتَعَلَّمُونَ
என்று வந்துள்ளது.
ஆகவே இதில் வரக்கூடிய ஃப என்பது ஸபபிய்யா என்பது இல்லை என்பது தெளிவாகிறது.
எனவே பீஜே அவர்கள் அல்லாஹ் வின் வேதத்தையே மாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் செய்த தவறை அல்லாஹ் வெளிப்படுத்தியுள்ளான்.
மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இப்படிக்கு
எம்.எஸ்.சல்மான் பாரிஸ் Misc