தொடர் கல்வி வகுப்பு
03: ஆதம் நபி (பாகம்-2)
(நபிமார்கள் வரலாறு )
ஆசிரியர்: S.யாஸிர் ஃபிர்தௌஸி
நாள் : 09/09/2019 திங்கட்கிழமை
இடம் : தமிழ் பிரிவு வகுப்பறை (அல் – ஜுபைல்
قَالَا رَبَّنَا ظَلَمْنَاۤ اَنْفُسَنَا ٚ وَاِنْ لَّمْ تَغْفِرْ لَـنَا وَتَرْحَمْنَا لَـنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ
(அதற்கு அவர்கள்) “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்களுக்கு அருள் புரியாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று (பிரார்த்தித்துக்) கூறினர்.
(அல்குர்ஆன் : 7:23)
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ
(அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (இறைவனை நோக்கி) “நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்” எனக் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 2:32)
01: ஆசிரியர் குறிப்பு (நபிமார்கள் வரலாறு)
https://youtu.be/8YfG9vYd26k
02: ஆதம் நபி (நபிமார்கள் வரலாறு)
https://youtu.be/_RcbS6sqMsk
உங்கள் பதிலை comment தெரிவிக்கவும்
கேள்விகள்
1.மலக்குமார்கள் கூறிய துவா என்ன.?
2.நேர் வழியில் எங்களை நடத்துவாயாக என்கிற துவாவின் விளக்கம் என்ன?
3.ஷைத்தானுக்கு என்ன என்ன படைகள் உண்டு ?
4.தன் இரு கரத்தினால் யாரை படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.?
5.ஜின்கள் படைக்கப்பட்ட ஆண்டு எது ?
6.ஜின்கள் படைக்கப்பட்டதை மலக்குகள் எப்படி அறிந்து கொண்டார்கள்.?
7.ஆதம் அலை அவர்களுக்கு அல்லாஹ் என்னென்ன பெயர்களை கற்றுக் கொடுத்தான்.?
8.ஆதம் அலை அவர்களின் சிறப்புகள் என்ன.?
9.எப்படிப்பட்ட மண் கொண்டு அல்லாஹ் ஆதமை படைத்தான் ?
10.அல்லாஹ்வின் அறிவை யாராலும் அறிய முடியாது என்பதிற்கான ஆதாரம் என்ன.?
11.ஆதம் அலை அவர்கள் தவறிழைத்த பின், அல்லாஹ்விடம் அவர்கள் செய்த துவா என்ன ?
12.தூதர்களின் வரலாறை ஏன் அறிந்து கொள்ள வேண்டும்.?
13.மக்கீ வசனம் மற்றும் மதனீ வசனம் என்றால் என்ன ?
14.இப்லீஸ் எந்த இனத்தை சார்ந்தவன்?
15.மலக்குமார்கள் எதனால் படைக்கப்பட்டார்கள் ?
16.சொர்க்கம் படைக்கப்படவில்லை என்று கூறிய வழி கெட்ட பிரிவினர் யார்.?
17.ஆதம் அலை அவர்களுக்கு உதாரணமாக, அல்லாஹ் வேறு ஒரு நபியை தன் திருமறையில் குறிப்பிடுகிறான். அது யார்?
18.ஷைத்தான் ஏன் ஆதமுக்கு ஸுஜூது செய்ய வில்லை?
19.ஷைத்தான் என்ன சபதம் எடுத்துக் கொண்டான்.?