ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்
பாகம் – 8
المتن இல் உலமாக்களின் பங்கு
ناسخ ومنسوخ – மாற்றப்பட்ட மற்றும் மாற்றிய சட்டங்கள்
مختلف الحديث ومشكل الحديث – முரண்பட்ட செய்திகள்
سبب الورود – நபி (ஸல்) ஹதீஸை அறிவித்த காரணிகள் காரணங்கள்
ناسخ ومنسوخ
மாற்றப்பட்ட மற்றும் மாற்றிய சட்டங்கள்
كنت نهيتكم عن زيارة القبور فزوروها فانها تذكركم الموت ] رواه مسلم
நபி (ஸல்) – இறந்தவர்களின் கப்ருகளை சந்திக்க செல்வதை தடுத்திருந்தேன் ஆனால் நீங்கள் கப்ருகளுக்கு செல்லுங்கள் அது உங்கள் மறுமை சிந்தனையை அதிகரிக்கும் (முஸ்லீம்)
تَوَضَّؤوا مِمَّا مَسَّتِ النَّارُ
அபூஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – நெருப்பு தீண்டியதை தின்றால் உளூ செய்யுங்கள் – (منسوخ – மாற்றப்பட்டுவிட்டது) (முஸ்லீம்)
நபி (ஸல்) அவர்கள் ஆட்டை சாப்பிட்டு விட்டு உளூ செய்யவில்லை என்ற ஹதீஸ் அதற்கு பின்னர் வந்தது (ناسخ – மாற்றக்கூடியது )
பொதுவாக இவ்வாறான ஹதீஸுகளை அறிவிக்கையில் முதலில் منسوخ ஐ அறிவித்து விட்டு ناسخ ஐ அறிவிப்பார்கள்.
அலி (ரலி)ஒரு நீதிபதியிடம் ناسخ ومنسوخ ஐ பற்றி தெரியுமா என்று கேட்டார்கள் .அவர்கள் இல்லையென்றதும் هلكت و أهلكت (நீயும் அழிந்து மக்களையும் அழித்து விட்டாய்) என்றார்கள்.
உதாரணம்:-
சாராயம் படிப்படியாக தடுக்கப்பட்ட விவரமில்லாமல் ஒருவர் குர்ஆனை அணுகினால் அவர் சாராயத்தை ஹலால் என்று புரிந்து கொள்ளக்கூடும். ஆகவே ناسخ ومنسوخ சம்மந்தமான அறிவு குர்ஆனிலும் ஹதீஸிலும் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது.