ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்
பாகம் – 7
ஹதீஸுகளை நாம் இரண்டாக பிரிப்போம்
ஹதீஸுன்நபவி الحديث النبوي – நபி (ஸல்) அவர்களின் ஹதீஸுகள்
ஹதீஸ் அல்குதுஸி الحديث القدسي – அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) கூறியவை.
மேற்கண்ட இரண்டு வகை ஹதீஸுகளிலும் ஸஹீஹ் ஆன ஹதீஸுகளும் இட்டுக்கட்டப்பட்ட அறிவிப்புகளும் இருக்கின்றன.
அல் குர்ஆன் | ஹதீஸ் அல் குதுஸி |
எந்த மாறுதலும் ஏற்படாது | மாற்றங்களுக்கு வாய்ப்பிருக்கிறது |
தெளிவான வஹீ.وحي جلي | وحي خفي. மறைவான வஹீ |
குர்ஆன் ஓதினால் ஒவ்வொரு எழுத்துக்கும் 10 நன்மை | இவற்றை ஓதினால் குர்ஆனைப்போல நன்மை கிடைக்காது. |
தொழுகையில் ஓதலாம் | தொழுகையில் ஓத முடியாது |
அர்த்தத்தை அறிவித்தல் கூடாது | அர்த்தத்தை அறிவித்தல் கூடும் الرواية بالمعنى |
ஹதீஸுகள் அனைத்தும் கிரந்தங்களில் தொகுக்கப்பட்ட காரணத்தினால் இன்றைய நிலையில் الرواية بالمعنى நாம் செய்யக்கூடாது.
அறிஞர்களின் கூற்றுப்படி சில ஹதீஸுகள் வேறு வேறு வார்த்தைகளில் அறிவிக்கப்படுவது الرواية بالمعنى -வினால் அல்ல நபி (ஸல்) வெவ்வேறு சபைகளில் அந்த ஹதீஸுகளை அவ்வாறு அறிவித்திருக்கும் காரணமே (اختلاف المجالس) என்கின்றனர்.
ஹதீஸில் 2 விஷயங்களை நாம் பார்க்கலாம்
சனத் السند (அறிவிப்பு தொடர்)
மத்தன் المتن (செய்தி)
இந்த السند – தைப் பற்றி உள்ள கல்விக்கு علم الرواية என்றும் المتن – னைப் பற்றி உள்ள கல்விக்கு علم الدراية என்றும் கூறுவார்கள்.
அரபு மொழியில் المتن என்றால் முதுகுத் தண்டு என்று பொருள் ஆகும். மூல புத்தகங்கள் அனைத்தும் المتن என்று அழைக்கப்படும்.
இஸ்லாத்தை எப்போதும் ஆய்வு செய்யும் மேற்கத்தியர்கள் (orientalist – المستشرقون) என்றழைக்கப்படுவர். இவர்களின் கூற்றுப்படி இஸ்லாமிய அறிஞர்கள் ஹதீஸில் எப்போதும் السند ஐ மட்டுமே ஆய்வு செய்கின்றனர் மாறாக المتن ஐ ஆய்வு செய்வதில்லை என்பார்கள். ஃபிரன்ச் புரட்சியின் பின்னணி உடைய சிலர் இஸ்லாத்தை நவீன (modern) வரையறைகள் வைத்து அணுக ஆரம்பித்தபோது ஹதீஸுகளை மீண்டும் மறுஆய்வு செய்யவேண்டுமென முடிவெடுத்தனர்.
இதனடிப்படையில் தான் பல ஹதீஸுகள் மேற்கத்தியர்களின் தாக்கத்தால் மறுக்கப்பட்டன.