ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்
பாகம் – 4
ஹதீஸ் கலை உலமாக்கள் சுன்னத் என்றால் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரி என்பார்கள்.
உஸூலுல் ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத்தை இஜ்திஹாதின் மூலாதாரம் என்பர்.
ஃபிக்ஹின் உலமாக்கள் சுன்னத் என்றால் (ஃபர்ள், வாஜிப், சுன்னத்) என்ற அடிப்படையில் கூறுவர்.
பொதுவாக சுன்னத் என்றால்
நபி (ஸல்) அவர்களின்
சொல்
செயல்
அங்கீகாரம்
இவற்றை குறிக்கும்
ஸஹீஹான ஹதீஸ் ளயீஃபான ஹதீஸ் என்று கூறுவது போல சுன்னத்தை கூற மாட்டோம்.
நடைமுறையில் சுன்னத் என்பது பித்அத்திற்கு எதிரானது என்பர்.
அறிஞர்களில் சிலர் ஹதீஸ் என்றால் நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள் என்றும் கூறுவர்.
இமாம் சுபியான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) ஹதீஸ் கலை இமாம் என்றும் கூறப்படுவார்.ஏனெனில் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சொல்லை மட்டுமே ஆய்வு செய்தவராக இருந்தார்கள்.
இமாம் அவ்ஸாயீ (ரஹ்) அவர்கள் ஸஹாபாக்களின் நடைமுறைகளை பற்றி ஆய்வு செய்வதில் சிறந்து விளங்கினார்கள். ஆகவே அவரை சுன்னத்தின் இமாம் என அழைத்தனர்.
இமாம் மாலிக் (ரஹ்) அவர்களைப்பற்றி கூறுகையில் அவருக்கு சுன்னத்தின் அறிவும் ஹதீஸின் அறிவும் நன்றாக இருந்தது என சில அறிஞர்கள் வேறுபடுத்திக்காட்டுவதுண்டு.
ஆகவே சுன்னத்திற்கும் ஹதீஸிற்கும் ஒரே அர்த்தம் தான் எனினும் உலமாக்கள் சில வேளைகளில் இவற்றை நுணுக்கமாக பிரிக்கின்றனர் என புரிந்து கொண்டோம்.