ஹதீஸூகளை அணுக வேண்டிய முறைகள்
பாகம் – 3
ஹதீஸை பழக்கத்தில் சுன்னத், அசர் (الاثر), ஹபர் (الخبر) , ரிவாயத்(الرواية) என்றும் அழைக்கலாம். இவையனைத்திற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பினும் ஹதீஸ் என்பதையே இது குறிக்கும்.
சுன்னத்(السنة) என்ற சொல் குர்ஆனில் பல இடங்களில் இடம்பெற்றிருக்கிறது
ஸூரத்துல் அன்ஃபால் 8:38
وَاِنْ يَّعُوْدُوْا فَقَدْ مَضَتْ سُنَّتُ الْاَوَّلِيْنَ
பனீ இஸ்ராயீல் 17:77
سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيْلًا
ஸூரத்துல் கஹ்ஃப 18:55
اِذْ جَآءَهُمُ الْهُدٰى وَيَسْتَغْفِرُوْا رَبَّهُمْ اِلَّاۤ اَنْ تَاْتِيَهُمْ سُنَّةُ الْاَوَّلِيْنَ اَوْ يَاْتِيَهُمُ الْعَذَابُ قُبُلًا
ஸூரத்துல் அஹ்ஜாப 33:62
سُنَّةَ اللّٰهِ فِى الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلُ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللّٰهِ تَبْدِيْلًا
இன்னும் பல இடங்களில் இந்த வார்த்தை இடம்பெறுகின்றது
சுன்னத் என்றால் நடைமுறை என்ற அர்த்தம் வரும்.
«من سن سنة حسنة فله أجرها وأجر من عمل بها،
யார் என்னுடைய அழகிய நடைமுறையை நடைமுறைப்படுத்துகிறாரோ அவருக்கு அந்த அழகிய நடைமுறையின் கூலியும்; அமல் செய்தவரின் கூலியும் கிடைக்கும்.