ஸீரா பாகம் – 24
உன் நபியை அறிந்துகொள்
✤ பத்ரில் 70 கைதிகள் சிறைபிடிக்கப்படுகிறார்கள். அவர்களை பிணைத்தொகை வாங்கி விட்டுவிடுவதா என்பது பற்றி பல ஆலோசனைகள் செய்யப்பட்டது. உமர் (ரலி) – அவர்களை எங்கள் கையில் தாருங்கள் இஸ்லாத்தின் எதிரிகளை நாங்கள் கொல்கிறோம் என்கிறார்கள். ஆனால் அபூபக்கர் (ரலி) பிணைத்தொகையை வாங்கி விட்டு விட்டுவிடுவோம் என்கிறார்கள். ஆகவே நபி (ஸல்) பிணைத்தொகையை பெற்றுக்கொண்டு அவர்களை விடுவித்து விட்டார்கள். பிறகு நபி (ஸல்) மஸ்ஜிதில் அழுது கொண்டிருந்தார்கள் உமர் (ரலி) காரணத்தை கேட்டார்கள். அப்போது அல்லாஹ் உங்கள் விருப்பத்திற்கேற்ப வசனத்தை இறக்கினான் என்று இந்த வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
❤ ஸூரத்துல் முஜாதலா 58:22
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே; (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான்; மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்படுத்தியிருக்கிறான்; சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்; அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர்; அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர் தாம் வெற்றி பெறுவார்கள்.