ஸீரா பாகம் – 39
உன் நபியை அறிந்துகொள்
நபி (ஸல்) விற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகள்
அவர்களை நம்பிக்கை கொள்ளவேண்டும்
அவர்களை நேசிக்க வேண்டும்
அவர்களது கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும்
அவர்களை பின்பற்ற வேண்டும்
அவர்களது வழிமுறையை ஏற்று நடக்க வேண்டும்
அவர்களை மதிக்க வேண்டும்
அவர்களுக்கு நன்மையை நாட வேண்டும்
அவர்களின் குடும்பத்தார்களையும் தோழர்களையும் நேசிக்க வேண்டும்
தோழர்கள் விஷயத்தில் அவர்களுக்கு மணவருத்தமளிக்கக்கூடாது
அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூற வேண்டும்.
ஸூரத்துல்ஆல இம்ரான்3:31,32
(31)(நபியே!) நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
(32) (நபியே! இன்னும்) நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்.” ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் – நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.