ஸீரா பாகம் – 37
உன் நபியை அறிந்துகொள்
அலீ இப்னு அபீதாலிப் (ரலி) நபி (ஸல்) வை வர்ணித்து கூறுகிறார்கள்.
💠 நபி (ஸல்) மிக நெட்டையோ மிக குட்டையோ இல்லை. கூட்டத்தில் பார்ப்பதற்கு நடுத்தரமானவர், அடர்த்தியான சுருட்டை முடியுடையவருமல்லர், கோரை முடி கொண்டவரவுமல்லர், சுருட்டை கோரை இரண்டிற்கும் நடுத்தரமான முடி கொண்டவர், பெருத்த உடம்பில்லை, முழுதும் வட்ட வடிவ முகமுமல்ல, நேரான கத்தி (ஒடுக்கமான) முகமுமல்ல, சிவந்த வெண்மை நிறமானவர், கருவிழி உடையவர், நீண்ட இமை முடி பெற்றவர், புஜமும் மூட்டு எலும்புகளும் தடிப்பானவர், நெஞ்சு முதல் தொப்புள் வரை கொடி போன்ற முடியுடையவர், உடம்பில் முடியிருக்காது, உள்ளங்காலும் கையும் தடித்தவர், அவர்கள் நடந்தால் பள்ளத்தில் நடப்பது போன்று பிடிப்போடு நடப்பார்கள், திரும்பிப்பார்த்தால் முழுமையாக திரும்பிப்பார்ப்பார்கள், இரண்டு புஜங்களுக்கு இடையில் நபித்துவ முத்திரையிருக்கும், தூதர்களில் இருந்தியானவர், மக்களில் மிக அதிகம் வழங்கும் கையுள்ளவர், துணிவுடைய உள்ளம் கொண்டவர், மக்களில் மிக அதிகம் உண்மை பேசுபவர், மக்களில் பொறுப்புகளை மிக அதிகம் நிறைவேற்றுபவர், மிக மிருதுவானவர், பழக மிகக்கண்ணியமிக்கவர், திடீரெனப்பார்த்தால் அச்சம் தரும் வடிவம், அறிமுகமானவர் அவரை விரும்புவர், அவர்களை யார் வர்ணித்தாலும் அவர்களுக்கு முன்னும் அவர்களுக்கு பின்னும் அவர்களைப் போன்று யாரையும் பார்த்ததில்லை என்றே கூறுவர் (இப்னு ஹிஷாம்)