ஸீரா பாகம் – 33
உன் நபியை அறிந்துகொள்
நபியவர்களின் குடும்பம்
💠 நபி (ஸல்) வின் பெரிய தந்தை :
- ஹாரிஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)
- சுபைர் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)
- அபூதாலிப்
💠 நபி (ஸல்) வின் சிறிய தந்தையர்கள் :
- ஹம்ஸா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)
- அபூலஹப் ●கைதாக் ●முகவ்விம் ●ழிரார்
- அப்பாஸ் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)
💠 நபி (ஸல்) வின் மாமிகள் :
- உம்மு ஹக்கீம் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●பார்ரா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●ஆதிகா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●சபிய்யா (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்)●அர்வா(இவர்களைப்பற்றிய குறிப்பு இல்லை)●உமைமா (இவர்களைப்பற்றிய குறிப்பு இல்லை )
💠 நபி (ஸல்) வின் மனைவிமார்கள் :
- கதீஜா பின்த் குவைலித் (ரலி)
- ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரலி)
- ஆயிஷா பின்த் அபூபக்கர் (ரலி)
- ஹப்ஸா பின்த் உமர் (ரலி)
- ஜைனப் பின்த் குஸைமா (ரலி)
- ஜைனப் பின்த் ஜஹஷ் (ரலி)
- ஜுவைரியா பின்த் ஹாரிஸ் (ரலி)
- உம்மு ஹபீபா ரம்லா பின்த் அபூ ஸுஃப்யான் (ரலி)
- சபிய்யா பின்த் ஹை (ரலி)
- உம்மு ஸலமா பின்த் அபூ உமய்யா (ரலி)
- மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி)
💠 இதில் கதீஜா (ரலி) அவர்களும் ஜைனப் பின்த் குஸைமா (ரலி) அவர்களும் நபி (ஸல்) உயிருடனிருக்கும்போதே இறந்துவிட்டார்கள். ஒரே சமயத்தில் 9 மனைவிமார்களுடன் நபி (ஸல்) வாழ்ந்தார்கள்.
💠 நபி (ஸல்) மனைவிமார்களுடன் மிகச்சிறந்தவர்களாக இருந்தார்கள், மனைவிகளுக்கு உதவி செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.