ஸீரா பாகம் – 27
உன் நபியை அறிந்துகொள்
❈ உஸ்மான் (ரலி) திரும்பி வந்ததும் குறைஷிகளுடன் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனாலும் குறைஷிகள் அந்த வருடத்தில் உம்ரா செய்ய அனுமதி இல்லையென்று கூறிவிட்டார்கள். அந்த ஒப்பந்தம் மிகவும் ஒரு தலை பட்சமாகவும் குறைஷிகளுக்கு அனைத்தும் சாதகமாகவும் இருந்தது.
❈ நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நாங்கள் கொல்லப்பட்டால் சொர்க்கத்திற்கு தானே செல்வோம்.குறைஷிகளின் இந்த அநியாயமான ஒப்பந்தத்திற்கு ஏன் உடன் படவேண்டும்? என்று நபி (ஸல்) விடமும் பிறகு அபூபக்கர் (ரலி) இடமும் கோபமாக பேசினார்கள். (இதை நினைத்து மரணம் வரை உமர் (ரலி) வருந்தியிருக்கிறார்கள்)
❈ ஸஹாபிகள் யாரும் இஹ்ராமை கலைக்காமல் இருப்பதை கண்டு வருந்திய நபி (ஸல்) அவர்கள் , தன் மனைவி உம்மு ஸலமா (ரலி) இடம் நபி (ஸல்) அவர்கள் தன் கவலையை தெரிவித்தார்கள். மனைவியின் ஆலோசனைப்படி நபி (ஸல்) மொட்டையடித்து பலி கொடுத்தார்கள் அதைத்தொடர்ந்து அனைத்து ஸஹாபாக்களும் மொட்டையடித்து இஹ்ராமை கலைத்து விட்டார்கள். நபி (ஸல்) உமர் (ரலி) யை அழைத்து இந்த வசனம் இறக்கப்பட்டதை கூறினார்கள். உமர் (ரலி) சந்தோஷமடைந்தார்கள்.
❤ ஸூரத்துல் ஃபத்ஹ் 48 : 1, 2
(1) (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்
(2) உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும்.