ஸீரா பாகம் – 26
உன் நபியை அறிந்துகொள்
❣ ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு :
- பனூ லிஹ்யான் போர்
- ஹுதைபிய்யாஹ் (ஒப்பந்தம்)
❈ இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு குறைஷிகளுடன் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
❈ நபி(ஸல்) உம்ராவிற்கு செல்வது போல கனவு கண்டார்கள். ஆகவே உம்ராவிற்காக மக்களுடன் கிளம்பினார்கள். குறைஷிகள் மக்காவிற்குள் அனுமதிக்க மறுத்தார்கள். உஸ்மான் (ரலி) வை சமாதானப் பேச்சிற்காக நபி(ஸல்) அனுப்பினார்கள். ஆனால் குறைஷிகள் உஸ்மான் (ரலி) யை மட்டும் உம்ரா விற்கு அனுமதிப்பதாக கூறினார்கள். பிறகு உஸ்மான் (ரலி) யை காணவில்லை என்பதால் நபி(ஸல்) அவர்கள் தன்னுடன் பைஅத் செய்யுமாறு சஹாபாக்களிடம் சொன்னார்கள். அல்லாஹ் அந்த பைஅத்தை பொருந்திக்கொண்டு வசனம் இறக்கினான்.
❤ ஸூரத்துல் ஃபத்ஹ் 48:18
முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான்; அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.