ஹதீத் பாகம் – 26
ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள்
باب ما يتقى من فتنة المال
சொத்துக்கள் பற்றிய சோதனையை அஞ்சுதல்
يوم التغابن – மறுமை நாள்(மனிதன் அறிவற்றவனாக நடந்து கொண்டான் என்பதை உணரும் நாள்)
اِنَّمَاۤ اَمْوَالُـكُمْ وَاَوْلَادُكُمْ فِتْنَةٌ
நபி (ஸல்) மிம்பரிலிருந்து உரை நிகழ்த்திக்கொண்டிருந்தார்கள் அப்போது ஹஸன் ஹுசைன் (ரலி) விளையாடிக்கொண்டு வருவதை கண்டு இறங்கி பிள்ளைகளை அணைத்து தூக்கிவிட்டு இந்த குழந்தைகளை கண்டு என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறிவிட்டு உங்களுடைய சொத்துக்களும் பிள்ளைகளும் உங்களுக்கு சோதனை தான் என்று அல்லாஹ் கூறுவது உண்மை தான் என்று கூறினார்கள்