Home / கட்டுரை / கட்டுரைகள் / ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 1 | கட்டுரை

ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும் புதிய தொடர் : 1 | கட்டுரை

நமது பகிரங்க விரோதியான ஷைத்தானின் சூழ்ச்சிகளை இனங்கண்டு அதிலிருந்து நாம் முழுமையாக விடுபடுவதற்கே இத்தொடர். அல்குர்ஆன், ஸுன்னா அடையாளப்படுத்தும் ஷைத்தானி சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும். அவன் ஒவ்வொரு நொடியும் நமக்கு எதிரியே, நமது உடலிளிருந்து இறுதி மூச்சுகள் பிரியும் வரை அவனது சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அவனது சூழச்சிகளை இனங்காணவில்லை யென்றால் நமது ஈருலக வாழ்வும் அழிந்து விடும்.

ஷைத்தானின் சூழ்ச்சிகளும், அவற்றுக்கான தீர்வும்.

சூழ்ச்சி-01 :- பாவங்களையும், தீமைகளையும் அலங்கரித்துக்காட்டுதல்.

தீர்வு; இஹ்லாஸுடன் (அல்லாஹ்வுக்காக என்ற தூய உள்ளத்துடன்) அவனுக்கு முழுமையாக அடிபணிந்து செயல்படுவது.

ஆதாரம்:
قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ
“(அதற்கு இப்லீஸ்,) ‘என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டு விட்டதால், நான் இவ்வுலகில் (வழிகேட்டைத் தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழி கெடுத்தும் விடுவேன் – அவர்களில் அந்தரங்க – சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர’ என்று கூறினான்’. (அல்ஹிஜ்ர் 15: 39, 40).

இன்றயை நிலை:- கொடிய பாவங்களாக இருக்கும், ஷிர்க்கையும், பித்அத்தையும் கூட மக்களுக்கு நன்மைகளாக ஷைத்தான் அலங்கரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றான். மற்றும் எத்தனையோ கொடிய தீமைகளை நவ நாகரீம் என்ற பெயரில், அதன் பெயர்கள் கூட மாற்றப்பட்டு மக்களுக்கு மத்தியில் தாராளமாக உலா வர விட்டிருக்கின்றான்.

நாம் வாழ்வது அல்லாஹ்வுக்காகவே என்று தமது வாழ்வை அமைத்துக் கொண்ட உண்மையான அடியார்களுக்கு முன்னால் தெளிவாகவே இப்லீஸ் தனது இயலாமையை வெளிப்படுத்தி விட்டான். எனவே நாம் எமது உள்ளங்களை எதன் மூலம் பலப்படுத்த வேண்டும் என்பது இப்போது புரிந்திருக்கும்.

தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி

Check Also

நோன்பின், ரமலானின் பயன்கள் | பாகம் – 02 | Assheikh Azhar Yousuf Seelani |

நோன்பின், ரமலானின் பயன்கள் | பாகம் – 02 | உரை: அஷ்ஷைக் அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி Subscribe to …

Leave a Reply