Audio mp3 (Download)
ஜும்ஆ குத்பா
வாட்டும் வறட்சியை போக்க வழி காட்டும் இஸ்லாம்,
வழங்குபவர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.
நாள் : 13-01-2017 வெள்ளிக்கிழமை
இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா
Audio mp3 (Download)
ஜும்ஆ குத்பா
வாட்டும் வறட்சியை போக்க வழி காட்டும் இஸ்லாம்,
வழங்குபவர் : மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி.
நாள் : 13-01-2017 வெள்ளிக்கிழமை
இடம் :போர்ட் கேம்ப் பள்ளி, அல்-ஜுபைல். சவூதி அரேபியா
Tags qurankalvi அல்-ஜுபைல் ஜும்ஆ குத்பா போர்ட் கேம்ப் பள்ளி மௌலவி S.யாஸிர் ஃபிர்தௌஸி
ஜும்ஆ குத்பா இஸ்லாத்தின் பார்வையில் சமாதானம் செய்தல் வழங்குபவர் : அஷ்ஷெய்க் அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி, நாள் : 17-01-2025 …
You must be logged in to post a comment.
தம்பி நீங்க நல்லா பேசுறதா நெனப்பா.
அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடுங்கள் என்று சொன்னால் ஏளனமாக பார்க்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அது அப்படி அல்ல…
நீங்கள் மற்றவர்களை பார்த்து ஏளனமாக பேசுவது போன்று அறிவுரை கூறுவதுதான் அவர்கள் உங்களது பேச்சை தூக்கி ஏறிய காரணங்கள்.
பொங்கல் பண்டிகை, ஜல்லிக்கட்டு போன்ற மாற்றுமத கலாச்சார கொண்டாட்டங்களில் முஸ்லீம் சமூகம் ஈடுபடுகிறது என்று கற்பனை செய்து என்னவெல்லாமோ பேசுகிறீர்கள். ஒருவேளை இருக்கலாம். ஆனால், சில மார்க்கம் அறியாதவர்கள் விகிதாச்சாரத்தில் அடிப்படையில், எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருக்கும் சிலர் அதனை செய்யலாம். ஆனால் ஒட்டுமொத்த சமூகமும் போன்களை லீவு போட்டு கொண்டாடுவது போல பேசுகிறீர்கள்.
தமிழகம் போன்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு உங்கள் பேச்சில் சலிப்பு மட்டுமே மிஞ்சுகிறது. இந்த நேரத்தில் மதிப்பிற்குரிய செய்யது அலி பைஜி, மதுரை இமாம் ஹுசைன் போன்றோர் ஜல்லிக்கட்டுக்கு முழு ஆதரவை வழங்கி உள்ளனர் என்பதனை கொஞ்சம் கருத்தில் கொள்ள வேண்டுகிறேன். (மாற்று கருத்து பேசும் எவரும் மன்ஹாஜில் இருந்து விளக்கி வைத்தாலும் வைப்பீர்கள்). இவ்வளவு பேசினீர்களே – அந்த தலைப்பை அன்சார் ஹுசைனுக்கு கொடுக்க வேண்டியது தானே ? அவர் அதனை பேசுவாரா ?
தமிழகம் முழுக்க நடைபெற்ற போராட்டங்கள் வெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்காக மட்டும் நடைபெற்றது என்று சொன்னால் உங்கள் அறிவை என்னவென்று சொல்வது ?
தமிழ் மண்ணில் நடைபெற்ற போராட்டம் என்பது ஆதிக்க சக்திகளுக்கு எதிரான மக்கள் போராட்டம். அன்று 1965 ஆம் ஆண்டு ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு இப்படி ஒரு போராட்டம் இப்போதுதான் நடைபெற்றுள்ளது. அரசியல்வாதிகள் மிரண்டு போயுள்ளனர்.
தமிழகத்தில் நம்மை ஆள்பவர்களுக்கும், நம் சமூகத்தின் பெயரை தவறாக சித்தரிக்கும் சங்பரிவார கும்பலுக்கும் சாவு மணி அடிக்கும் பொருட்டு இந்த போராட்டம் நடைபெற்று இன்று வெற்றிபெற்றுள்ளது. பலியிடுதல் போன்ற மார்க்க அடிப்படையிலான விஷயங்களில் கை வைத்தால் எம் சமூகம் எப்படி பொறுத்துக்கொண்டு இருக்காதோ, அதே போன்று நம்முடைய தோழமை சமூகமும் அவர்களுடைய கலாச்சாரத்தில் கை வைக்கும்போது சிலிர்த்து எழுகிறார்கள்அவர்களுக்கு ஆதரவு தரும் பொருட்டு அவர்களோடு களத்தில் வெறுமனே நின்றால் உங்களை போன்றோருக்கு தூக்கம் வராதே.
அன்று எம் சமூகம் அடிப்பட்டபோது தோழமை சமுதாயம் நம்மோடு எப்படி கை கோர்த்து நின்றதோ அதேபோன்று அவர்களின் உரிமைக்காக நாம் கை கோர்ப்பதில் எந்த தவறும் இல்லை. தமிழகம் போன்ற பலசமூகம் வாழும் ஒரு மாநிலத்தில் சங்பரிவார கும்பல்களின் சூழ்ச்சிகளை முறியடிக்க இதுபோன்ற ஒரு புரிந்துணர்வு தேவைப்படுகிறது. அதனை வரவேற்காவிட்டாலும் பரவாயில்லை, வாய் மூடியாவது இருக்க வேண்டிக்கொள்கின்றோம்.
தமிழகத்தில் இருக்கும் பிரச்சினைகளை வலைத்தளங்களில் மட்டும் பார்த்துவிட்டு, படித்துவிட்டு ஜும்மா பேருரை நிகழ்த்துவதை நிறுத்திவிட்டு, தமிழ் நாட்டிற்கு சென்று அழைப்புப்பணி செய்து பாருங்கள். அப்போது உங்களுக்கு கள நிலவரம் தெரியும், புரியும்.