அகீதா
மின்ஹாஜுல் முஸ்லீம்
மறுமையின் அடையாளங்கள் பாகம் – 15
ظهور الفحش وقطيعة الرحم وسوء الجوار
நபி (ஸல்) – மானக்கேடான விஷயங்கள் பரவுதல், ரத்தபந்தங்கள் முறிவதும், அண்டைவீட்டாரை நம்பாத காலம் உருவாகும் (அஹ்மத், ஹாகிம்)
تشبب المشيخة
முதியவர்களை இளம் நபர்களை போல காட்டக்கூடிய முயற்சி அதிகரிக்கும் காலம்.
قال رسول الله صلى الله عليه وسلم يكون قوم يخضبون في آخر الزمان بالسواد
كحواصل الحمام لا يريحون رائحة الجنة
நபி ஸல்- ஒரு சமுதாயம் உருவாகும் அவர்கள் தலைக்கு சாயம் பூசுவார்கள் அவர்கள் சுவர்க்கத்தின் வாசத்தை கூட நுகர மாட்டார்கள் (ஸுனன் அபூ தாவூத், ஸுனன் நஸயீ )
கஞ்சத்தனம் பெருகும் :
عن أبي هريرة – رضي الله عنه – أن رسول الله – صلى الله عليه وسلم – قال:
((يتقارب الزمان، وينقص العمل، ويلقى الشح،
அபூ ஹுரைரா (ரலி) – நபி (ஸல்) – ஒரு காலம் வரும் அமல்கள் குறையும் கஞ்சத்தனம் அதிகரிக்கும் (புஹாரி, முஸ்லீம்)