மார்க்கத்தில் இல்லாதவற்றை மார்க்கம் எனும் பெயரில் அரங்கேற்றும் “பித்அத்” வாதிகளிடம் கல்வி கற்பது கூடுமா?
==================================
இமாம் இப்னு உஸைமீன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் பின்வரும் வினா வினவப்பட்டது:
வினா:
” மார்க்கத்தில் இல்லாதவற்றை மார்க்கம் எனும் பெயரில் செய்யும் “பித்அத்” வாதிகளிடம் கல்வி கற்பதைப் பற்றி சில மாணவர்கள் வினவுகின்றனர், அதாவது பித்களில் ஒரு பித்அத்தில் அறிமுகமான ஓர் ஆலிமிடம் கல்வி கற்பதைப் பற்றியதாகும் எனினும் அவர் அரபு இலக்கணம், வாரிசுரிமைச் சட்டம் போன்ற கலைகளில் சிறப்பாக கை தேர்ந்தவர், இவ்வாறானவரிடம் கல்வி கற்பதன் சட்டம் யாது ?
பதில் :
“இவர்கள் மற்றும் இவர்களைப் போன்றோரிடம் கல்வி கல்வி கற்பதில் இரண்டு விடயங்கள் பயப்பட வேண்டியுள்ளன:
#முதலாவது: மார்க்கத்தில் இல்லாவற்றை மார்க்கம் என்ற போர்வையில் செய்யும் இந்த பித்அத் வாதிகளிடம் விவேகவும், அறிவு நுணுக்கமும் இருக்கின்றன, அத்தோடு அவர்கள் உதாரணங்கள் கூறப்படுவதற்கு குறைவாக இருப்பினும் அவர்களில் பெரும்பாலானோரிடம் தெளிவுபடுத்தும் ” பயான்” எனும் ஆற்றல் இருக்கின்றமையால் மக்களை “பித்அத்” களின் பால் இழுத்துச் செல்கின்றனர் – எடுத்துக்காட்டாக அவர்கள் அரபு இலக்கணத்தைக் கற்பிக்கக் கூடியவர்களாக இருப்பதைப் போன்றதாகும் –
#இரண்டாவது: ஓர் நம்பிக்கையான உறுதியான ஓர் மனிதர் அவர்களைப் பார்த்து திகைத்துப் போனால், மக்கள் அவர்கள் “ஹக்” உண்மையில் தான் இருப்பதாக எண்ணி ஏமாந்து விடுகின்றனர்.
■ இதனால் இயன்றளவு அவர்களிடமிருந்தும் அவர்களிடம் கற்பதிலிருந்தும் எச்சரிக்கையாக இருப்பது மிக அவசியமாகும் – அல்ஹம்துலில்லாஹ்- (ஏனெனில்) அவர்கள் அல்லாத நேர்வழியில் இருக்கும் அஹ்லுஸ் ஸுன்னாக்களிடம் அவ்வறிவைப் பெற்றுக்கொள்ள முடியும்”
( அத் தஃலீக் அலா ஸஹீஹி முஸ்லிம்: 1/39)
தமிழாக்கம்:
அ(z)ஸ்ஹான் ஹனீபா
29/05/2016
قال العلامة ابن عثيمين – عليه رحمات رب العالمين – :
” الأخذ عن أهل البدع يسأل عنها بعض الطلبة ، وهي أخذ العلم عن عالم معروف ببدعة من البدع ، لكنه متقنٌ لفنٍّ من الفنون ؛ كالنحو أو الفرائض ، فما الحكم ؟
• – الجواب : أن الأخذ عن هؤلاء وأمثالهم يُخشى منه أمران :
• – الأول : أن هؤلاء المبتدعة عندهم ذكاء وفطنة ، وغالبهم عندهم بيانٌ ، فيُخشى أن يستجِرُّوا هؤلاء إلى بدعتهم ، ولو على الأقل بالأمثلة – إذا كانوا يدرِّسون في النحو مثلاً – .
• – الثاني : أنه إذا تردَّد إليهم الإنسان الموثوق ؛ اغترَّ الناس بذلك ، فظنوا أنهم على حق .
• – فلهذا يجب الحذر بقدْر الإمكان ، والعلم عندهم – بحمد الله – قد يكون عند غيرهم من أهل السنة .