கப்ரிலே இறங்கி ஜனாஸாவை வைப்பவருக்குறிய சட்டம்:
அவர் அன்றிரவு தன்னுடைய மனைவியுடன உடலுறவில் ஈடுபடாதவாரக இருக்க வேண்டும்…
நபி(ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தம் மகள் (ஒருவரை அடக்கம் செய்யும்போது) நாங்கள் அங்கே இருந்தோம். தம் இரண்டு கண்களிலிருந்தும் நீர்வழிய கப்ருக்கருகே அமர்ந்திருந்த நபி(ஸல) அவர்கள், ‘இன்றிரவு தம் மனைவியோடு கூடாதவர் யாரேனும் உங்களில் உண்டா?’ என வினவினார்கள். ‘நான் உள்ளேன்’ என அபூ தல்ஹா(ரலி) கூறியவுடன் அவரை கப்ரில் இறங்குமாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவரும் (நபியவர்களின் மகளுடைய) கப்ரில் இறங்கினார்.
இதை அனஸ் இப்னு மாலிக்(ரழியழ்ழாஹு அன்ஹு) அறிவித்தார்கள்
ஸஹீஹ் புஹாரி : 1285
பாசத்தில் மதிப்பீடு செய்ய முடியாத அழ்ழாஹ்வின் தூதர் தன்னுடைய மகளை கப்ரிலே வைக்காமல் மற்றொருவரின் உதவியை நாடுகிறார்கள் என்றால் அழ்ழாஹ்வின் தூதர் அன்றிரவு தன்னுடைய மனைவியுடன் கூடியுள்ளார்கள் என்பதையும் மனைவியுடன் குறிப்பிட்ட இரவில் கூடியவர் கப்ரிலே இறங்கி ஜனாஸாவை வைக்க முடியாது என்பதையும் இந்த நபி மொழி நமக்கு உணர்த்துவதை அறிய முடிகிறது.
எனவே, அன்பிற்குரிய சகோதரர்களே, நம் பாசத்திற்குரிய தந்தையாக இருக்கலாம். தாயாக இருக்கலாம். தூக்கி வளர்த்த செல்லக் குழ்ந்தையாக இருக்கலாம். பாசம் பொழிந்த அன்பு மனைவியாக இருக்கலாம். தோல் கொடுத்த சகோதர, சகோதரியாக இருக்கலாம். ஒன்றாக திரிந்த உயிர் நண்பனாக இருக்கலாம். யாராக இருந்தாலும் குறிப்பிட்ட காரியத்தில் ஈடுபட்ட ஒருவர் தன்னுடைய பாசத்திற்குரியவர்களது கப்ரிலே இறங்கி ஜனாஸாவை வைக்க முடியாது என்பதை ஒட்டு மொத்த உம்மத்தின் மீதும் பாசம் கொண்ட அழ்ழாஹ்வின் தூதரின் சம்பவத்திலிருந்து உணர்ந்து கொண்டு சட்டம் தெரிந்தவர்கள் சொல்லும் போது அதைக் கேட்டு ஏற்றுக் கொண்டு மனதார பிரார்த்தித்து செல்ல நம் அனைவருக்கும் ஏக றப்புல் ஆலமீன் துணை புரிவானாக.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…
அல் ஹாபிழ் ZM. அஸ்ஹர் (பலாஹி)
(மதீனா பல்கலைக்கழக மாணவன்)