ஃபிக்ஹ் பாகம் – 1
நிஃபாஸ்
நிஃபாஸ் – பிள்ளைப்பேரின் காரணமாக வெளியேறக்கூடிய இரத்தம்.(குறைமாதத்தில் பிறந்த பிள்ளையாக இருந்தாலும் சரியே)
பிள்ளைப்பெறின் நேரத்திலோ அல்லது பிள்ளைப்பேறுக்கு முன்னரோ பிள்ளை பேருக்கு பின்னரோ வரும் இரத்தத்தை நிஃபாஸ் என்போம்.
கால அளவு
- குறைந்த காலத்திற்கு எந்த அளவும் இல்லை
- குழந்தை பிறந்து சிறிது நேரத்திலே கூட இரத்தம் நின்று விடலாம் அல்லது சில குழந்தைகள் இரத்தம் இல்லாமலேயே பிறக்கலாம். எவ்வாறாயினும் எத்தனை விரைவில் அந்த இரத்தம் நின்று விட்டாலும் அந்த பெண் பெருந்தொடக்கிலிருந்து சுத்தமாகி விடுகிறாள்.
அதிகமான காலம் 40 நாள் வரை இருக்கலாம். அதற்குப்பின்னும் இரத்தப்போக்கு இருந்தால் அதை நாம் பெருந்தொடக்காக கருத முடியாது.