Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / நஜீசின் வகைகள் பாகம் 5

நஜீசின் வகைகள் பாகம் 5

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 5

உண்பதற்கு தடுக்கப்பட்ட பிராணிகளின் சிறுநீரும் மலமும் அசுத்தமாகும் (கழுதை, பருந்து….)

அப்துல்லாஹ் இப்னு மசூத் – நபி (ஸல்) தன் தேவையை நிறைவேற்ற சென்றார்கள்.என்னிடம் 3 கற்களை கொண்டு வரச்சொன்னார்கள் ஆனால் 2 கற்கள் தான் எனக்கு கிடைத்தது ஆனால் 3 வது கல் கிடைக்காததால் 3 வதாக கழுதையின் விட்டையை கொண்டு சென்றேன். அந்த கழுதையின் விட்டையை வீசிவிட்டார்கள்.

எந்த பிராணியுடைய மாமிசத்தை உண்பதற்கு அனுமதியிருக்கிறதோ அதனுடைய மலமும் ஜலமும் நஜீஸ் அல்ல.

ஆதாரம் – அனஸ் (ரலி) – சில மக்கள் மதீனாவுக்கு வந்தபோது அவர்களுக்கு நோய் ஏற்பட்டுவிட்டது அவர்களுக்கு ஒட்டகத்தின் பாலையும் சிறுநீரையும் குடிக்கக்கொடுக்கச் சொன்னார்கள்.

நபி (ஸல்) – அசுத்தமான பொருளில் அல்லாஹ் நிவாரணத்தை வைக்கவில்லை .

நபி (ஸல்) விடம் – ஆட்டுத்தொழுவம் அல்லது மாட்டுத்தொழுவத்தில் தொழலாமா என்று கேட்டபோது தொழலாமே என்று கூறினார்கள். ஒட்டகம் கட்டப்படும் இடத்தில தொழலாமா என்று கேட்டபோது வேண்டாம் என தடுத்தார்கள்.

இப்னு முன்திர் (ரஹ்) கூறினார்கள்உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட பிராணிகளின் மலஜலம் அசுத்தமா இல்லையா என்பதில் இரு கருத்துக்கள் இருக்கிறது.
ஒட்டகத்தின் சிறுநீர் பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply