ஃபிக்ஹ்
நஜீஸ்களின் வகைகள் பாகம் – 4
المني والمذي والودي
சிறுநீரும் பிறகு வரும் வெள்ளை நிற வழுவழுப்பான நீர் ↔ الودى
இச்சை நீர் ↔ المذي
(இந்திரியம் (குளிப்பு கடமை ↔ المني
(8) الودى – சிறுநீருக்குப் பிறகு வரும் வெள்ளை நிற கனமான திரவம். இது அசுத்தமாகும். இது உடலிலோ உடையிலோ பட்டால் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
ஆயிஷா (ரலி) – சிறுநீர் கழித்ததற்கு பின் வரும் வதீ வந்தால் உளூ முறிந்து விடும். அவர்கள் அதை சுத்தப்படுத்த வேண்டும் குளிக்கத்தேவையில்லை.
✽ நபி (ஸல்) – والمذي والودي வெளிப்பட்டால் நீங்கள் உறுப்புகளை சுத்தம் செய்து விட்டு உளூ செய்தால் போதுமானது.
(9) المذي – இச்சை நீர். வழுவழுப்பான வெள்ளை திரவம். பாலியல் உணர்வுகள் ஏற்படும்போது அல்லது கணவன் மனைவி உறவின் ஆரம்பத்தில் வரும். இது அசுத்தமாகும். இது உடலிலோ உடையிலோ பட்டுவிட்டால் கழுவ வேண்டும்.
✽ அலி (ரலி) – எனக்கு அதிகமான மதி வெளியாகும். நபி (ஸல்) என்னுடைய மாமனாராக இருந்ததால் இதை பற்றி கேட்க வெட்கப்பட்டேன். ஆதலால் இன்னொருவர் மூலம் நபி (ஸல்) விடம் கேட்டபோது – நபி (ஸல்) அவரிடம் உளூ செய்யச் சொன்னார்கள்(புஹாரி). ஆகவே மதி வெளிப்பட்டால் சுத்தம் செய்ய வேண்டும் என்பதால் அதை அசுத்தம் என்று நாம் அறிகிறோம்.
✽ நான் அதிகமாக மதி வெளியாகக்கூடியவனாக இருந்தேன். ஆதலால் நான் அதிகமாக குளித்துக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) கூறினார்கள் நீங்கள் உளூ செய்தால் போதுமானது. ஆடையில் பட்டால் அதில் தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். (அபூதாவூத், இப்னு மாஜா, திர்மிதி)
உலமாக்கள் – உடலில் பட்டால் கழுவ வேண்டும் உடையில் பட்டால் தண்ணீர் தெளித்து விடுங்கள்.
(10) المني – இந்திரியம் (குளிப்பு கடமை).
இது சுத்தமா அசுத்தமா என்பதில் அறிஞர்களுக்கிடையில் 2 கருத்துக்கள் இருக்கிறது. இது உடையில் பட்டால் ஈரமாக இருந்தால் கழுவிக்கொள்ள வேண்டும் காய்ந்துவிட்டால் சுரண்டி விட்டால் போதுமானது.
✽ ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) வின் ஆடையில் இந்திரியம் காய்ந்திருந்தால் நான் என் விரலால் சுரண்டி விடுவேன். ஈரமாக இருந்தால் நான் கழுவி விடுவேன். (தாரகுத்னி)