Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / நஜீசின் வகைகள் பாகம் 12

நஜீசின் வகைகள் பாகம் 12

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 12

குபா வாசிகள் கற்களாலும் தண்ணீராலும் சுத்தம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களை புகழ்ந்து அல்லாஹ் குர்ஆனில் கூறியிருக்கிறான்.

நபி (ஸல்) – உங்களிலொருவர் மலம் கழிக்கச்சென்றால் 3 கற்களைக்கொண்டு சுத்தம் செய்யட்டும் அது அவர்களுக்கு போதுமானது (அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, தாரகுத்னி)

அனஸ் (ரலி) – நபி (ஸல்) மலஜலம் கழிக்கச்சென்றால் நானும் இன்னொரு சிறுவரும் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போவோம். பொதுவாக நபி (ஸல்) சிறுநீர்கழிக்கும் இடத்தை குத்தி அதற்கேற்ப அந்த இடத்தை ஆக்கிவிட்டு சிறுநீர் கழிப்பார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) – ஒருமுறை நபி (ஸல்) இரண்டு கப்ர்களுக்கு அருகாமையில் நடந்து சென்றார்கள். அப்போது இவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள். ஆனால் பெரிய தவறு செய்யவில்லை ஒருவர் சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யமாட்டார். இன்னொருவர் கோள் சொல்லித்திரிந்தார். (திர்மிதி, அபூ தாவூத், நஸாயீ)

இன்னொரு அறிவிப்பில்: பெரிய குற்றமல்ல ஆனாலும் பெரிய குற்றம் தான் என்று கூறினார்கள்.

அனஸ் (ரலி) – நபி (ஸல்) – நீங்கள் சிறுநீரிலிருந்து உங்களை சுத்தம் செய்து கொள்ளுங்கள் அதிகமான கப்ரின் வேதனை அதிலிருந்துதான் வருகிறது.

பெரும்பாவம் என்பதை எப்படி அறிந்து கொள்வது?

எந்த பாவம் செய்தால் நரகத்தை பற்றி எச்சரிக்கப்பட்டிருக்கிறதோ அது பெரும்பாவம்.

எந்த பாவத்தை செய்தால் அல்லாஹ்வுடைய தூதருடைய சாபம் உண்டாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறதோ அது பெரும்பாவமாகும்.

உதாரணம்: வட்டி சம்பந்தமாக, பெற்றோர்களை சபிப்பவர்கள், இது போன்றவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் உண்டாகட்டும் என நபி (ஸல்) அறிவித்திருக்கிறார்கள்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply