ஃபிக்ஹ்
நஜீஸ்களின் வகைகள் பாகம் – 10
திறந்தவெளியில் மலஜலம் கழிக்கும் பொது கிப்லாவை முன்னோக்கியோ பின்னோக்கியோ அமரக்கூடாது. கட்டிடத்துக்குள் போவதாயின் எந்த பக்கமும் முன்னோக்கலாம்.
ஆதாரம் :
إذَا جلس أحَدُكُم عَلَى حَاجَتِهِ فَلا يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلا يَسْتَدْبِرْهَا
➥ அபூஹுரைரா (ரலி) – எவரேனும் மலஜலம் கழிக்க அமர்ந்தால் அவர் கிப்லாவை முன்னோக்கவும் வேண்டாம் பின்னோக்கவும் வேண்டாம் (ஸஹீஹ் முஸ்லீம்)
✴ இப்னு உமர் (ரலி) – நான் என்னுடைய சகோதரி ஹப்ஸா (ரலி) யின் வீட்டிற்கு சென்றபோது வீட்டின் மேலேறியபோது நபி (ஸல்) தன் தேவையை நிறைவேற்ற அமர்ந்திருந்தார்கள் ஷாம் தேசத்தை முன்னோக்கியும் கஹ்பாவை பின்னோக்கியும் அமர்ந்திருந்தார்கள் ( கட்டிடத்துக்குள் ) (புஹாரி, முஸ்லீம்)
✴ பொந்துகளில் மலஜலம் கழிப்பதை நபி (ஸல்) தடுத்தார்கள் ஏனெனில் அது ஜின்கள் குடியிருக்குமிடம் என்று கூறினார்கள் ( அஹ்மத், நஸயீ, அபூதாவூத், ஹாகிம், பைஹகீ )
✴ நபி (ஸல்) – இரண்டு சாபங்களை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். மனிதர்கள் நடக்கக்கூடிய பாதையும் அவர்கள் அமரக்கூடிய நிழல்களும். (அங்கே மலஜலம் கழிக்காதீர்கள்)
✴ குளிக்கும் இடங்களில் மலஜலம் கழிக்கக்கூடாது.