Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / நஜீசின் வகைகள் பாகம் 1

நஜீசின் வகைகள் பாகம் 1

ஃபிக்ஹ்

நஜீஸ்களின் வகைகள் பாகம் – 1

சூரா அல் முத்தஸ்ஸிர் 74:4

وَثِيَابَكَ فَطَهِّرْ

➥   உம் ஆடைகளைத் தூய்மையாக ஆக்கி வைத்துக் கொள்வீராக.

சூரா அல்பகறா 2:222

إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

  பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”

  நபி (ஸல்) – சுத்தம் ஈமானின் பாதியாகும்

   செத்த பிராணி

இஸ்லாம் சொன்ன பிரகாரம் அறுக்கப்பட்ட பிராணிகள் ஹலாலானவை. அதை தவிர எப்படி செத்தாலும் அந்த பிராணிகள் ஹலாலானவை அல்ல (கழுத்து நெறிக்கப்பட்டது , அடிபட்டு இறந்தது, தானாக செத்தவை …..)

சூரா அல்மாயிதா 5:3

حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ

  செத்தவைகள் உங்களுக்கு ஹராமாக்கப்பட்டிருக்கிறது.

விதிவிலக்குகள்

 மீன் செத்துப்போனாலும் நஜீஸ் அல்ல.

நபி (ஸல்) –  கடல் நீர் தன்னிலும் சுத்தம் பிறரையும் சுத்தப்படுத்தும். அதில் செத்தவையும் ஹலால் தான்.

 இப்னு உமர் ரலி – நபி (ஸல்) – எங்களுக்கு இரண்டு மையத்துகள் ஹலாலாக்கப்பட்டிருக்கிறது மீனும் வெட்டுக்கிளியும்.

(முஸ்னத் இமாம் அஹ்மத், இப்னு மஜா, பைஹகீ, தாரகுத்னீ) இந்த ஹதீஸ் பலகீனமானதாக இருந்தாலும் அந்த ஸஹாபியின் செய்தி உண்மையானது என இமாம் அஹ்மத் கூறுகிறார்.

 எந்த உயிரினங்களின் உடம்பில் ஓடும் ரத்தம் இல்லையோ அவைகள் செத்தால் அது நஜீஸ் அல்ல (எறும்பு, தேனீப்பூச்சி).

 செத்த பிராணிகளின் எலும்பு, கொம்பு, நகம் போன்றவை கழுவினால் சுத்தமாகிவிடும்.

இப்னு அப்பாஆஸ் (ரலி) – மைமூனா (ரலி) க்கு ஒரு ஆடு கொடுக்கப்பட்டது அது செத்துவிட்டது. நபி (ஸல்) – அதன் தோலை எடுத்து பதப்படுத்தியிருக்கலாமே அதில் பிரயோஜனமடைந்திருக்கலாமே – அதை உண்பது தான் ஹராம்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply