ஃ பிக்ஹ் பாகம் – 1
தொழுகையின் வாஜிப்கள்
தொழுகையின் வாஜிபுகள் – واجبات الصلاة
- தொழுகையின் ஃபர்ளு(ருக்குன்) விடுபட்டால் அதை மீண்டும் செய்தே ஆக வேண்டும்; ஆனால் வாஜிப் விடுபட்டால் சஜ்தா சஹூ செய்தால் போதுமானது.
வாஜிப்
- غير تكبيرة الاحرام – தொழுகையில் ஆரம்ப தக்பீர்(تكبيرة الاحرام) தவிர மற்ற அனைத்து தக்பீர்களும் வாஜிப் ஆகும்.
- ருக்கூவில் இருந்து எழும் போது இமாம் سَمِـعَ اللَّهُ لِمَـنْ حَمِـدَه; சொல்வது.
- ருக்கூவில் سبحان رب العظيم; சொல்வது.
- ருகூவில் ஓத கூடிய திக்ருகள்.
سبحان رب العظيم
(முஸ்னத் இமாம் அஹ்மத், அபு தாவூத், இப்னு மாஜா)
- நபி(ஸல்) سبحان ربي العظيم وبحمده ; என்றும் ஓதி இருக்கின்றார்கள்.
(சுனன் அபு தாவூத், சுனன் தார குத்னி, முஸ்னத் இமாம் அஹ்மத், தப்ரானி, பைஹகி)
سبوح قدوس رب الملائکه والروح
(சஹீஹ் முஸ்லீம்)
سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي
(புஹாரி, முஸ்லிம்)
- இது அல்லாது வேறு துஆக்களும் உள்ளன; நாம் இந்த துஆக்களை மட்டும் தற்போது அறிந்து கொள்வோம்.
سَمِـعَ اللَّهُ لِمَـنْ حَمِـدَه ஓதிய பின் ஓதும் துஆகள்.
ربنا لك الحمد
ربنا ولك الحمد
اللهم ربنا لك الحمد
اللهم ربنا ولك الحمد
اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ
بَعْدُ
(புஹாரி, அஹ்மத், சஹீஹ் முஸ்லிம்)
சுஜூதில் ஓத கூடிய திக்ருகள்
سبحان رب الاعلی
( அஹ்மத் , அபு தாவூத் , தாரகுத்னி, இப்னு மாஜா)
سبحان رب الاعلی و بحمده
(அபுதாவூத், தாரகுத்னி, முஸ்னத் அஹ்மத்)