ஃபிக்ஹ் பாகம் – 2
தொழுகையின் ஃபர்ளுகள்
நிய்யத் என்பது தொழுகையின் நிபந்தனைகளில் ஒன்றாகும். வணக்கங்கள் அனைத்திற்கும் நிய்யத் மிக அவசியமான ஒன்றாகும்.
தொழுகையின் ஃபர்ளுகள் (ருக்னு):
அல்லாஹ்விற்காக (இஹ்லாஸாக) செய்ய வேண்டும்
ஸூரத்துல் பய்யினா 98:5
وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَعْبُدُوا اللّٰهَ مُخْلِصِيْنَ لَـهُ الدِّيْنَ
“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்…
انما الاعمال بالنيات
உமர் (ரலி) – நபி (ஸல்) – அமல்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதெல்லாம் எண்ணத்தைக்கொண்டே. (புஹாரி)
نوى- ينوى- نية (நிய்யத்) எண்ணுதல்
நிய்யத் என்றால் அரபு மொழியின் அர்த்தத்தில் – ஒரு விஷயத்தை செய்வதென முடிவெடுப்பது என்று அர்த்தம்.
மார்க்க அடிப்படையில் : அல்லாஹ்வை நெருங்குவதற்காக ஒரு காரியத்தை செய்வதென உறுதிகொள்வது.
நிய்யத்தின் இடம் உள்ளமாகும்.
வாயால் மொழிவதற்கு அரபியில் تلفظ என்று கூறுவார்கள்
இப்னுல் கய்யிம் (ரஹ்)- நிய்யத் என்றால் ஒரு காரியத்தை செய்ய நினைப்பது அல்லது முடிவெடுப்பது. அதன் இடம் உள்ளமாகும். அதற்கும் நாவிற்கும் எந்த சம்மந்தமுமில்லை.
தொழுகைக்கு வாயால் நிய்யத்தை கூற வேண்டும் என்று எந்த ஒரு ஹதீஸும் இல்லை.
நிய்யத்தை வாயால் மொழிவது பித்அத் ஆகும் என பெரும்பாலான அறிஞ்சர்கள் கூறுகிறார்கள்.
مَن أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد” ورواه مسلم بلفظ ءاخر
وهو: ” من عمل عملا ليس عليه أمرنا فهو رد
ஆயிஷா (ரலி) – நபி (ஸல்) – யார் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை புதிதாக உருவாக்குகிறாரோ அதுவும் ஏற்றுக்கொள்ள படாது.
யாரொருவர் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை செய்கிறாரோ அதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது.(புஹாரி)