துல்ஹஜ் மாதத்தின் சிறப்பம்சங்கள் PDF (Download)
بسم اهلل الرحمن الرحيم
1437 துல்ஹஜ் மாதத்தின் சிறப்பு அம்சங்கள்
1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் உம்ரா செய்வது மறு உம்ரா
வரையில் உள்ள பாவங்களின் பரிகாரமாகும். சரியான முறையில் நிறைவேற்றப்பட்ட
ஹஜ்ஜுக்கு, சொர்க்கத்தைத் தவிர வேறு கூலியில்லை. புகாரி (1773)
2. ஆயிஷா (ர-) அவர்கள் கூறினார்கள்: நாங்கள் (மகளிர்), “அல்லாஹ்வின் தூதரே!
அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவதையே நாங்கள் சிறந்த செயலாகக் கருதுகிறோம்;
எனவே நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்)
அவர்கள் “(அவ்வாறு) இல்லை. எனினும் (பெண்களுக்குச்) சிறந்த ஜிஹாத் பாவச் செயல்
எதுவும் கலவாத ஹஜ்தான்” என்றார்கள். புகாரி (1520)
3. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தீயவற்றில் ஈடுபடாமலும், எந்தப்
(பெரும்) பாவமும் செய்யாமலும் யார் இந்த ஆலயத்தை ஹஜ் செய்கிறாரோ அவர்
அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புகிறார். புகாரி (1820)
4. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில்
ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும்
அகற்றாமல் இருக்கட்டும்! முஸ்லிம் (3999)
5. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாவது)
நாளில் நோன்பு நோற்றால் அல்லாஹ் அதன் மூலம் முந்தைய ஓராண்டின் பாவம்
மற்றும் பிந்தைய ஓராண்டின் பாவத்தை மன்னிக்கிறான். முஸ்லிம் (2152)
6. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : (துல்ஹஜ் முதல்) பத்து நாட்களில் செய்யப்படும்
நற்செயல்கள் மற்ற நாட்களில் செய்யப்படும் நற்செயல்களை விட சிறந்தது.
அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி (969)
7. இப்னு உம்ர் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து
நாட்களிலும் கடை வீதிக்குச் சென்று தக்பீர் கூறுவார்கள். அவர்கள் இருவரும் தக்பீர்
சொல்லும்போது மக்களும் அவர்களுடன் தக்பீர் சொல்வார்கள். புகாரி (968)
8. ஹஜ் மற்றும் உம்ரா செய்யக்கூடியவர்கள் தன் செல்வத்தில் ஹலாலான தூய்மையான
செல்வத்தையே இதற்காக செலவிட வேண்டும். ஏனென்றால் அல்லாஹ்
தூய்மையானவன். அவன் தூய்மையானதைத் தவிர வேறெதையும் ஏற்கமாட்டான் என
நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸ்லிம் (1842)
9. ஹஜ் செய்யக்கூடியவர் மீக்காதை (இஹ்ராம் அணியும் எல்லை) அடையும் போது
குளித்து உடலில் நறுமணம் பூசிக்கொள்வது சிறந்ததாகும். ஆனால் இஹ்ராமுடைய
ஆடையில் நறுமணம் பூசக்கூடாது.
10. ஹஜ் செய்யக்கூடியவர் ஹஜ் மற்றும் உம்ராவின் சட்டதிட்டங்களை அறிந்துகொள்ள
வேண்டும். இதுபற்றி தனக்கு ஏற்படும் சந்தேகங்களை அறிஞர்களிடம் கேட்டுத்
தெளிவுபெற வேண்டும்.
11. இஹ்ராம் அணிந்தவர் தேவை ஏற்படும்போது மெதுவாக தன் தலையை தேய்த்துக்
குளித்துக் கொள்ளலாம். அப்போது அவரின் தலையிலிருந்து முடி உதிர்ந்தால் அதனால்
தவறேதுமில்லை.
12. இஹ்ராம் அணிந்த ஆணும் பெண்ணும் தன் ஆடையில் அசுத்தம் பட்டால் அதனை
கழுவிக்கொள்ளலாம். அல்லது அதற்கு பதிலாக வேறு ஒரு இஹ்ராம் ஆடையை
மாற்றிக்கொள்ளலாம். இதில் தவறில்லை.