ஃபிக்ஹ் பாகம் – 4
சுத்தம் – தயம்மும்
எந்த காரணங்களுக்கு தயம்மும் செய்யலாம்?
தண்ணீர் இல்லையென்றால்
ஆதாரம் :
இம்ரான் இப்னு ஹுசைன் (ரலி) – நாங்கள் நபி (ஸல்) உடன் ஒரு பிரயாணத்திலிருந்தபோது நபி (ஸல்) எங்களுக்கு தொழுவித்தார்கள் அப்போது ஒரு மனிதர் தொழாமல் தனிமையிலிருந்தார்கள். நபி (ஸல்) அவரிடம் காரணம் கேட்டபோது அவர் எனக்கு குளிப்பு கடமையாகி விட்டது தண்ணீருமில்லை ஆகவே நான் தொழவில்லையென்று கூறினார்கள். நீங்கள் மண்ணை வைத்து தயம்மும் செய்திருக்கலாமே என்று நபி (ஸல்) உபதேசித்தார்கள்(புஹாரி, முஸ்லீம்)
அபூதர் (ரலி) -10 ஆண்டுகள் வரை தண்ணீரில்லையென்றாலும் மண் அதற்கு பகரமாக சுத்தம் செய்யக்கூடியதாக இருக்கிறது.(அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதி-ஹசன் ஸஹீஹ்)