தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 73
(இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும் ↔ نُوْرٌ عَلٰى نُوْرٍ
அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் ↔ يَهْدِى اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ يَّشَآءُ
சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான்
اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك
யா அல்லாஹ் உள்ளங்களை புரட்டுபவனே என்னுடைய உள்ளத்தை உன்னுடைய தீனில் நிலைக்கச்செய்.
✥ நபி (ஸல்) -ஒரு அடியான் சொர்க்கவாசிக்குரிய செயல்களையே செய்துக்கொண்டு அவனுக்கும் சொர்க்கத்திற்கும் ஒரு ஜான் இருக்கும்போது நரகவாசியின் அமல் செய்து நரகம் நுழைந்து விடுவான்………………
✥ நபி (ஸல்) விடம் ஒருவரைப்பற்றி அனைவரும் பாராட்டுகிறார்கள். நபி (ஸல்) அவர் நரகவாசி என்று கூறியதும் ஏன் நபி (ஸல்) அப்படி சொன்னார்கள் என்று ஸஹாபாக்கள் அவரைப்பின்தொடர்ந்த போது போரில் வலி தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து விட்டார்.
✥ நபி (ஸல்) விடம் ஒருவர் வந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு உடனே போரில் கலந்து ஷஹீத் ஆக மரணித்து சுவர்க்கம் சென்ற ஸஹாபி…. ஒரு தொழுகை கூட தொழவில்லை. அதற்கு முன் மரணித்து விட்டார்கள்.
மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை ↔ وَ يَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِؕ وَاللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ ۙ
அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.