தஃப்ஸீர்
சூரத்து நூர் பாகம் – 7
❤ வசனம் 3
اَلزَّانِىْ لَا يَنْكِحُ اِلَّا زَانِيَةً اَوْ مُشْرِكَةً وَّ الزَّانِيَةُ لَا يَنْكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ ۚ وَحُرِّمَ
ذٰ لِكَ عَلَى الْمُؤْمِنِيْنَ
விபச்சாரம் செய்பவன்↔ اَلزَّانِىْ
திருமணம் செய்ய மாட்டன் ↔ لَا يَنْكِحُ
விபசாரியைத் தவிர ↔ لَّا زَانِيَةً
அல்லது இணை வைத்து வணங்குபவளை ↔ اَوْ مُشْرِكَةً
மேலும் ஒரு விபசாரி ↔ وَّ الزَّانِيَةُ
திருமணம் செய்ய மாட்டள் ↔ لَا يَنْكِحُهَاۤ
விபச்சாரம் செய்பவனை தவிர ↔ اِلَّا زَانٍ
அல்லது இணை வைத்து வணங்குபவனை ↔ اَوْ مُشْرِكٌ
அது ஹராமாக்கப்பட்டிருக்கிறது ↔ وَحُرِّمَ ذٰ لِكَ
முஃமின்கள் மீது ↔ عَلَى الْمُؤْمِنِيْنَ
➥ விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் – இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.
விளக்கம்:
இப்னு அப்பாஸ் (ரலி) – விபச்சாரம் செய்ய ஒருவன் செல்வதாக இருந்தால் அவன் விபச்சாரியிடம் தான் செல்வான். அல்லது முஸ்லிமல்லாத ஒருத்தியிடம் செல்வான்
✴ மர்சத் இப்னு அபீ மர்சத் என்ற நபித்தோழர் ஒரு விபச்சாரியை திருமணம் முடிக்கவா என கேட்டபோது நபி (ஸல்) இந்த வசனத்தை ஓதிக்காட்டியதாக ஒரு விளக்கம் இருக்கிறது.