தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 63
வசனம் 32 :
اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ
அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை வசதியுள்ளவர்களாக மாற்றுவான
முஃபஸ்ஸிர்களின் கருத்து :
அல்லாஹ் மன நிறைவை ஏற்படுத்துகிறான்
ليس الغنى عن كثرة العرض ولكن الغنى غنى النفس
அபூஹுரைரா (ரலி) -நபி (ஸல்) – செல்வம் என்பது நிறைய பொருட்கள் வந்து சேருவதல்ல உண்மையான செல்வம் போதுமென்ற மனம் தான் (முஸ்லீம்)
ஹலாலான மனைவி கிடைத்து விட்டால் மன நிறைவை அடைந்து விடுகிறான் அதை தான் இந்த வசனம் குறிக்கிறது என சிலரின் கருத்து
பெரும்பாலான அறிஞர்கள் கூறுகிறார்கள் இதில் பொருளாதாரத்தை தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான் என்று. ஆகவே ஏழைகளாக இருந்தால் திருமணம் முடித்தால் அல்லாஹ் தன்னுடைய நாட்டத்திற்கேற்றார் போல வசதியுள்ளவராக மாற்றுவான்.