Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 35

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 35

தஃப்ஸீர்

சூரத்துந் நூர் பாகம் – 35

وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهٗ

இல்லையென்றால் – وَلَوْلَا

 அல்லாஹ்வுடைய அருள் – فَضْلُ اللّٰهِ

 உங்களுக்கு – عَلَيْكُمْ

 மேலும் அவனுடைய அன்பும் – وَرَحْمَتُهٗ

مَا زَكٰى مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا

 உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க

முடியாது

 இல்லை – مَا

 பரிசுத்தம் – زَكٰى

 உங்களில் – مِنْكُمْ

 ஒருவரும் – مِّنْ اَحَدٍ

 ஒருபோதும் – اَبَدًا

 சூரா ஷம்ஸ் இல் 11 முறை சத்தியம் செய்து விட்டு அல்லாஹ் கூறுகிறான்

 

ஸூரத்துஷ் ஷம்ஸ் 91: 9, 10

قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا ۙ

(9) அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.

وَقَدْ خَابَ مَنْ دَسّٰٮهَا ؕ‏

(10) ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.

 

وَّلٰـكِنَّ اللّٰهَ يُزَكِّىْ مَنْ يَّشَآءُ‌

 தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான்

 ஆனால் – وَّلٰـكِنَّ

 பரிசுத்தப்படுத்துகிறான் – يُزَكِّىْ

 யாருக்கு நாடுகிறானோ – مَنْ يَّشَآءُ‌

 

 நபி (ஸல்) அதிகமாக சுஜூதில் கேட்ட துஆ

اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا

 அல்லாஹ்வே – اللَّهُمَّ

  என் ஆத்மாவிற்கு கொடு – آتِ نَفْسِي

  அதற்கு தக்வாவை – تَقْوَاهَا

அதை தூய்மை படுத்து – وَزَكِّهَا

 தூய்மை படுத்துவதில் நீயே சிறந்தவன் – أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا

நீதான் அதற்கு பொறுப்புதாரி – أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا

 

ஸூரத்துல் ஃபஜ்ரி 89: 22 , 23 , 24

وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ۚ

(22) இன்னும், வானவர்கள் அணியணியாக நிற்க,உமது இறைவன் வந்துவிட்டால்

وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ  ۙ‌ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰىؕ‏

(23) அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது – அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன்.

يَقُوْلُ يٰلَيْتَنِىْ قَدَّمْتُ لِحَـيَاتِى‌ۚ‏

(24) “என் (மறுமை) வாழ்க்கைக்காக நன்மையை நான் முற்படுத்தி (அனுப்பி)யிருக்க வேண்டுமே!” என்று அப்போது மனிதன் கூறுவான்.

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply