Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 3

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 3

 

தஃப்ஸீர்

சூரத்து நூர் பாகம் – 3

 வசனம் 2

اَلزَّانِيَةُ وَالزَّانِىْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ‌ وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِىْ دِيْنِ

اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ۚ وَلْيَشْهَدْ عَذَابَهُمَا طَآٮِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِيْنَ‏

கசையடி அடியுங்கள் ↔ فَاجْلِدُوْا

ஒவ்வொருவருக்கும் ↔ كُلَّ وَاحِدٍ

அவர்கள் இவர்களில் ↔ مِّنْهُمَا

நூறு கசையடிகள் ↔ مِائَةَ جَلْدَةٍ‌

உங்களை பிடிக்கவேண்டாம் ↔ وَّلَا تَاْخُذْكُمْ

அவர்களுடைய விஷயத்தில் ↔ بِهِمَا

கருணையை ↔ رَاْفَةٌ

அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் ↔ فِىْ دِيْنِ اللّٰهِ

நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் ↔ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ

அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ↔ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ۚ

சாட்சியமளிக்கட்டும் ↔ وَلْيَشْهَدْ

அவர்கள் இருவரது வேதனை ↔ عَذَابَهُمَا

கூட்டத்தார் (ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள்) ↔ طَآٮِٕفَةٌ

ஈமான் கொண்டவர்களிலிருந்து ↔ مِّنَ الْمُؤْمِنِيْنَ

  விபசாரியும், விபசாரனும் – இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சடடத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.

❤ பனீ இஸ்ராயீல் 17:32

وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً  ؕ وَسَآءَ سَبِيْلًا‏

  நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.

 ⭕நபி (ஸல்) – மிஃராஜ்- மேல் பக்கம் ஒடுக்கமாகவும் கீழ் பகுதி விரிவாகவும் இருக்கிறது அதில் நிர்வாணமான ஆண்களும் பெண்களும் நெருப்பில் எரிக்கப்படுகிறார்கள் – விபச்சாரம் செய்தவர்கள்.

⭕ விபச்சாரத்தில் மிக மோசமானது நெருக்கமானவர்களுடன் விபச்சாரம் செய்வதாகும்.

أَيُّ الذَّنْبِ أَعْظَمُ ؟ قَالَ : أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ . قَالَ : قُلْتُ : ثُمَّ مَاذَا ؟ قَالَ :

أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَأْكُلَ مَعَكَ . قَالَ : قُلْتُ : ثُمَّ مَاذَا ؟ قَالَ :: «أن تزْنِيَ

بِحليلة جارك

அப்துல்லாஹ் இப்னு மசூத் (ரலி) – நபி (ஸல்) – பாவத்தில் மிகப்பெரும் பாவம் எது?- அல்லாஹ் உன்னை படைத்திருக்கும்போது அவனை விட்டுவிட்டு வேறு யாரையாவது வணங்குவது.-அடுத்தது – உன்னுடைய பிள்ளையை கொல்வது – பிறகு?- அண்டை வீட்டாரின் மனைவியுடன் விபச்சாரம் செய்வது

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply