தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 20
❤ வசனம் 16
وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا يَكُوْنُ لَـنَاۤ اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ۖ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ
அதை செவியுற்றபோது கூறியிருக்கக்கூடாதா – وَ لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ
எங்களுக்கு (தகுதி) இருக்கவில்லை – مَّا يَكُوْنُ لَـنَاۤ
இப்படி பேச – اَنْ نَّـتَكَلَّمَ بِهٰذَ ا ۖ
இது பெரும் பழியாகும் – هٰذَا بُهْتَانٌ عَظِيْمٌ
➥ இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?
❤ வசனம் 17
يَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَۚ
அல்லாஹு உங்களுக்கு அறிவுரை கூறுகிறான் – يَعِظُكُمُ اللّٰهُ
மீள்வது – اَنْ تَعُوْدُوْا
இது போன்ற – لِمِثْلِهٖۤ
ஒரு போதும் – اَبَدًا
நீங்கள் முஃமின்களாக இருந்தால் – اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَۚ
➥ நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.