தஃப்ஸீர்
சூரத்துந் நூர் பாகம் – 2
குர்ஆனை நாம்
- ஓத வேண்டும்.
- ஆய்வு செய்ய வேண்டும்.
- அதைக்கொண்டு அமல் செய்யவேண்டும்.
❤ ஸூரத்து தாஹா 20:124
وَمَنْ اَعْرَضَ عَنْ ذِكْرِىْ فَاِنَّ لَـهٗ مَعِيْشَةً ضَنْكًا وَّنَحْشُرُهٗ يَوْمَ الْقِيٰمَةِ اَعْمٰى
➥ “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
❤ ஸூரத்து முஹம்மது 47:24
اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا
➥ மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?
இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக தப்ஸீரில்
❣ குர்ஆனில் சில பகுதி அனைவராலும் புரிந்து கொள்ள முடியும் (இந்த பகுதியை நாம் புரிந்து கொள்ளாமல் இருப்பது நமக்கு ஆபத்தானது).
❣ இன்னும் சில அரபு தெரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
❣ இன்னும் சில உலமாக்களை மட்டுமே புரியும்.
❣ இன்னும் சில அல்லாஹ்விற்கு மட்டுமே தெரியும்.
நீங்கள் நல்லுபதேசம் பெறலாம் – لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ