Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 1

தஃப்ஸீர் சூரா நூர் பாகம் 1

 

தஃப்ஸீர் சூரா நூர் 

பாகம் 1

இந்த அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது.
மதீனாவில் அருளப்பட்ட சூராக்கள் அதிகமாக சட்டங்களை பற்றி பேசக்கூடியதாக இருக்கும்.
64 வசனங்கள் உள்ளன.
பெயர் பெறக்காரணம் 35 ஆவது வசனத்தில்

اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ

⇒ அல்லாஹ் வானங்களதும் பூமியினதும் ஒளியாவான் என வந்திருக்கிறது. இதில் ஒளியைப்பற்றி வந்திருப்பதால் தான் இந்த பெயர் பெற்றிருக்கிறது.

⇒ முஃபசிர்கள் ( திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் ) கூறுகிறார்கள் இந்த அத்தியாயத்தில் உள்ள சட்டங்களும், ஒழுங்குகளும் மனித சமுதாயத்திற்கு ஒளியாக இருப்பதால் தான் இப்பெயர் பெற்றது என கூறுகிறார்கள்.

அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் 5 முக்கியமான தலைப்புகளை தெளிவு படுத்துகிறான்.

ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றக்கூடாது.

அல்லாஹ்வுடைய வல்லமைகளை விளக்குகிறான்.

ஒரு வீட்டில் நுழையும்போது பின்பற்ற வேண்டிய ஒழுக்கம்.

ஆயிஷா ( ரலி ) வை அல்லாஹ் பரிசுத்தப்படுத்தினான்.

அல்லாஹ்வுடைய சட்டங்கள், தண்டனைகள் பற்றி.

அல்லாஹ் இந்த சூராவை ஆரம்பிக்கும்போது இதன் சிறப்பைக் கூறி ஆரம்பிக்கிறான்.

❤ வசனம் 1

سُورَةٌ أَنزَلْنَاهَا وَفَرَضْنَاهَا وَأَنزَلْنَا فِيهَا آيَاتٍ بَيِّنَاتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُونَ

سُورَةٌ ↔ என்ற வார்த்தையின் அர்த்தம் குறித்த கருத்துக்கள்

سُورَةٌ ↔ அத்தியாயம் , அல்லது உயர்ந்தது

سور ↔ வேலி

 ⬇↔ سُءر

முந்திய அத்தியாயத்தின் தொடராக வருவதால் இப்பெயர் பெற்றிருக்கலாம்

أَنزَلْنَاهَا* நாம் அதை இறக்கினோம்

*இறக்கினோம் என்று அல்லாஹ் கூறுவதன் மூலம் அல்லாஹ் வானத்தில் இருக்கிறான் என்று புரிந்து கொள்ளலாம்.

குர்ஆனில் அல்லாஹ் அர்ஷின் மேல் உயர்ந்து இருக்கிறான் என்பதை  பல இடங்களில் கூறியிருக்கிறான்.

உதாரணம் (20:5),(25:59),(13:2),(57:4),(10:3),(32:4)

وَفَرَضْنَاهَا وَأَنزَلْنَا فِيهَا آيَاتٍ بَيِّنَاتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُونَ

وَفَرَضْنَاهَا ↔ மேலும் நாம் அதை கடமையாக்கியுள்ளோம்

وَأَنزَلْنَا ↔ மேலும் நாம் இறக்கியுள்ளோம்

فِيهَا ↔ அதில்

آيَاتٍ ↔ அத்தாட்சிகள்

بَيِّنَاتٍ ↔தெளிவுபடுத்த கூடியது

لَّعَلَّكُمْ تَذَكَّرُونَ ↔ நீங்கள் படிப்பினை பெறுவதற்காக

🔹 (இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருளச் செய்தோம்.

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply