தஃப்ஸீர்
சூரா அல்ஃபுர்கான் பாகம் – 9
வசனம் 69
يُضٰعَفْ لَهُ الْعَذَابُ يَوْمَ الْقِيٰمَةِ وَيَخْلُدْ فِيْهٖ مُهَانًا
➥ கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
வசனம் 70
اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ عَمَلًاصَالِحًـا فَاُولٰٓٮِٕكَ يُبَدِّلُ اللّٰهُ سَيِّاٰتِهِمْ حَسَنٰتٍ ؕ وَكَانَ اللّٰهُ غَفُوْرًا رَّحِيْمًا
➥ ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ – அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
தவ்பாவிற்குரிய நிபந்தனைகள்:
- இஹ்லாஸ்
- தான் செய்யும் தவறை உணர்ந்து கவலைப் பட வேண்டும்.
- அந்த தவறை உடனடியாக விடுவது
- அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டேன் என்று முடிவெடுப்பது
மனிதர்களுக்கிடையில் தவறு செய்திருந்தால் அவர்களிடம் தான் மன்னிப்பு கேட்க வேண்டும்.