Home / Classes (e-learning) / Al-Islah WhatsApp Class / தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான் பாகம் 4

தஃப்ஸீர் சூரா அல்ஃபுர்கான்

பாகம் 4

❤ வசனம் 64

وَالَّذِيْنَ يَبِيْتُوْنَ لِرَبِّهِمْ سُجَّدًا وَّقِيَامًا‏ 

ஸுஜூத் –  سُجَّدًا

நின்ற நிலையிலும் –  وَّقِيَامًا‏  

  இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.

،أوصاني  خليلي صلى الله عليه وسلم بثلاث: صيام ثلاثه أيام من كل شهر ❤

وركعتي الضحي، وأن أوتر قبل أن أنام

 

  அபூஹுரைரா (ரலி) – என்னுடைய தோழர் நபி (ஸல்) எனக்கு மாதத்தில் 13, 14, 15 ஆம் நாட்கள் நோன்பு வைக்குமாறும், லுஹா தொழுமாறும், தூங்கும் முன் வித்ர் தொழுமாறும் உபதேசம் செய்தார். அன்றிலிருந்து நான் இந்த 3ஐயும் விடவில்லை.

❤  அழைப்புப்பணியில் இருப்பவர் இரவுத்தொழுகை(தஹஜ்ஜுத்) தொழுவது சிறந்தது.

சூரா அல் முஜ்ஜம்மில் 73 : 2, 3, 4, 5

  (2) قُمِ الَّيْلَ اِلَّا قَلِيْلًا 

  இரவில் – சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக;

(3) نِّصْفَهٗۤ اَوِ انْقُصْ مِنْهُ قَلِيْلًا

  அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக!

(4) اَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْاٰنَ تَرْتِيْلًا

  அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக; மேலும் குர்ஆனைத் தெளிவாகவும், நிறுத்தி, நிறுத்தியும் ஓதுவீராக.

 (5) اِنَّا سَنُلْقِىْ عَلَيْكَ قَوْلًا ثَقِيْلًا

➥   நிச்சயமாக, நாம் விரைவில் கனமான உறுதியான – ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்.

(6) اِنَّ نَاشِئَةَ الَّيْلِ هِىَ اَشَدُّ وَطْـاً وَّاَقْوَمُ قِيْلًا

➥   நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்த வல்லது.

❤  இரவுத்தொழுகை அசதி அல்லது நோயின் காரணமாக விட்டுவிட்டால் பகலில் அதற்கு நிகராக தொழுவார்கள் (இரவில் 11 என்றால் பகலில் அதை 12 ஆக்கி தொழுவார்கள்)

 

Check Also

வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் – 7

ஃபிக்ஹ் பாகம் – 7 வித்ரு தொழுகையின் முக்கியத்துவம் அதன் சட்டங்களும் ❣ 9 ரக்காஅத் ஆக தொழும்போது ஆயிஷா …

Leave a Reply